17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: துபாயில் பிரபல இந்திய பாடகர் கைது
Recommended Video

துபாய்: 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகர் மிகா சிங் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் பாடகரான மிகா சிங் விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

மிகா சிங் தனக்கு ஆபாச புகைப்படங்களை செல்போனில் அனுப்பியதாக அந்த மாடல் அழகி துபாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு 3 மணிக்கு மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து துபாயில் உள்ள இந்திய தூரகத்தின் உதவியை நாடியுள்ளார் மிகா சிங் என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சுரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மிகா சிங் மீது இது போன்ற புகார் எழுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக மிகா சிங் மீது புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











