வாட்ச்மேன் வேலை பார்த்த நடிகருக்கு தானாக வந்து உதவிய பிரபல பாடகர்
மும்பை: வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் நடிகர் சாவி சித்துவுக்கு பிரபல பாடகர் மிகா சிங் உதவி செய்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்த சாவி சித்து பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இது குறித்த வீடியோ வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் சாவி சித்துவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் பிரபல பாடகர் மிகா சிங்.

மிகா சிங்
பிபாஷா பாசு, கரண் சிங் குரோவரை வைத்து பூஷன் பட்டேல் இயக்கும் ஆதத் படத்தை மிகா சிங் தயாரிக்கிறார். அந்த படத்தில் நடிக்க சாவி சித்துவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார் மிகா சிங்.

வாட்ச்மேன்
தான் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு அளித்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் சாவி சித்துவை தனது குழுவில் வந்து சேருமாறு கூறியுள்ளார் மிகா. வாட்ச்மேன் வேலையை விட்டுவிட்டு முழு நேரம் சினிமாவில் ஈடுபட அழைத்துள்ளார் மிகா.

கதாபாத்திரம்
நான் இயக்குநர் பூஷன் பட்டேலை அணுகி கதையில் சிறு மாற்றம் செய்து சாவி சித்துவுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்குமாறு கேட்டேன். மேலும் அவருக்கு வாய்ப்பு அளிக்குமாறு பிறரிடமும் பரிந்துரை செய்துள்ளேன். நடிப்பு பயிற்சியாளராக அவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் மிகா சிங்.

உணவு
மிகா பற்றி சாவி சித்து கூறியதாவது, எனக்கு மிகாவிடம் இருந்து போன் கால் வந்தது. யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர் தான் பேசினார். வாட்ச்மேன் வேலை பார்த்தது போதும், என்னுடன் வந்துவிடுங்கள் என்றார். என் வீட்டிற்கு கார் அனுப்பினார். உடை, உணவு கொடுத்தார். இன்னும் 10 நாட்களில் அவர் படத்தில் நடிக்கிறேன் என்கிறார்.

அதிர்ச்சி
பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த சாவி சித்து மாதம் ரூ. 9 ஆயிரம் சம்பளத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்தது வருத்தம் அளித்தது. அவரும் என்னை போன்று பஞ்சாபை சேர்ந்தவர். அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். யாருமே அவருக்கு வாய்ப்பு அளிக்காதது அதிர்ச்சி அளித்தது என்று மிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











