ப்பா பார்த்து எத்தனை வருஷமாச்சு.. ஹீரோவாக களமிறங்கும் மைக் மோகன்.. ஹரா அதிரடி டீசர்!

சென்னை: மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த மோகன், நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாத நிலையில், தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் மோகன் நடித்த முதல் திரைப்படமான மூடு பனி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்து அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, நூறாவது நாள் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார்.

Mike Mohan starrer haraa movie teaser out

80 மற்றும் 90கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன், ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரேவதியுடன் இவர் சேர்ந்து நடித்த மெளன ராகம் திரைப்படத்தையும் அந்த படத்தின் பாடலையும் இன்றைய 2கே கிட்ஸ்களும் கொண்டாடி வருகின்றனர்.

மைக் மோகன்: பிஸியாக நடித்து வந்த மோகன் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போனார். தற்போது, இவர் விஜய்யின் தளபதி68 படமான கோட் படத்தில், வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். கதாநாயனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த மைக் மோகன், கோட் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாக: இந்நிலையில், நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஹரா படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கி உள்ளார். இப்படத்தை, கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கியுள்ளார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு: ஹரா படத்தின் டீசல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது, இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். இப்படம் முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன் சாருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு. படம் நன்றாக வந்து இருக்கிறது.

மேலும், இந்த படத்தில் 93 வயதாகும் சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். படத்திற்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை என பேசினார். இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் எஸ் பி மோகன் ராஜ், நடிகர் மோகன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், யோகி பாபு, ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X