twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைகர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த மைக் டைசனுக்கு சம்பளம் இவ்ளோவா?: வேண்டாமென மறுத்த கரண் ஜோஹர்

    |

    ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த 'லைகர்' கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது.

    பூரி ஜெகன்நாத் இயக்கிய 'லைகர்' குத்துச்சண்டை பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது.

    இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார்.

    ஸ்போர்ட்ஸ் ஜானரில் லைகர்

    ஸ்போர்ட்ஸ் ஜானரில் லைகர்

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் 25ம் தேதி வெளியான 'லைகர்' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. குத்துச்சண்டை போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். குத்துச்சண்டை வீரர் கேரக்டர் என்பதால் விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் மிரட்டிருந்தார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டேவும், அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். இன்னொரு முக்கியமான கேரக்டரில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார்.

    இந்திய சினிமாவில் முதன்முறையாக

    இந்திய சினிமாவில் முதன்முறையாக

    மைக் டைசன் இதுவரை இந்தியத் திரைப்படங்களில் நடித்ததே இல்லை. அதனால், 'லைகர்' படத்தில் அவர் கமிட் ஆனது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்காக லைகர் படக்குழுவினர் ரொம்பவே ரிஸ்க் எடுத்து மைக் டைசனை அணுகியதாக சொல்லப்பட்டது. மேலும், மைக் டைசன் சம்பந்தபட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டன. இந்திய சினிமாவொன்றில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

    மைக் டைசனின் சம்பளம்

    மைக் டைசனின் சம்பளம்

    இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களே கோடிகளில் சம்பளம் வாங்கும் போது, மைக் டைசன் பற்றி கேட்கவா வேண்டும். 'லைகர்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க மைக் டைசனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேமியோ ரோலில் நடிக்க 25 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, டோலிவுட், பாலிவுட் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    கரண் ஜோஹர் எதிர்ப்பு

    கரண் ஜோஹர் எதிர்ப்பு

    லைகர் படத்தில் மைக் டைசனை நடிக்க வைப்பது குறித்து முதலில் பூரி ஜெகன்நாத் தான் திட்டமிட்டராம். ஆனால், "இது சரியாக இருக்காது, மைக் டைசனை கேமியோ ரோலில் நடிக்க வைப்பது தேவையில்லாதது" என கரண் ஜோஹர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கரண் ஜோஹர் 'லைகர்' படத்தின் இந்தி தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கரண் ஜோஹரின் எதிர்ப்பையும் மீறி மைக் டைசன் தான் நடிக்கணும் என்பதில் பூரி ஜெகன்நாத் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், இவ்வளவு கோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவான 'லைகர்' திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏமாற்றம் தான் மிச்சம்

    ஏமாற்றம் தான் மிச்சம்

    மேலும், ".தெலுங்கில் சமீபத்தில் வெளியான பிம்பிசாரா', சீதா ராமம்' கார்த்திகேயா 2 படங்கள் மட்டும் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளன.. இந்தப் படங்கள் 150 கோடியில் இருந்து 175 கோடி ரூபா வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பு போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் 'லைகர்' படத்தை உருவாக்க 3 வருடங்கள் ஆனது. பல கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே படத்தைத் தயாரித்தோம். ஆனால், இப்போது ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Mike Tyson played a cameo role in the Vijay Devarakonda starrer 'Liger'. Mike Tyson has been paid 25 crore rupees to act in this film( விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘லைகர்’ படத்தில் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்க மைக் டைசனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X