twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Nadigarsangamelction: எதிர்பார்த்தது போன்றே வாக்குப்பதிவு மையத்தில் பிரச்சனை

    By Siva
    |

    Recommended Video

    Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

    சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

    நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

    Mild tension in Nadigar Sangam election polling booth

    இந்த பிரச்சனைகளை தாண்டி நடிகர் சங்க தேரதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிகள் போட்டியிட்டுள்ளன.

    கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு மையத்தில் பெரிய பிரச்சனை நடந்தது. அதனால் இம்முறையும் பிரச்சனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாக்குப்பதிவு மையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

    சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு 9 பேர் வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றதாகக் கூறி பாண்டவர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது.

    இது குறித்து அறிந்த நெட்டிசன்களோ, நல்ல வேளையாக கை கலப்பில் முடியவில்லை, இல்லை என்றால் என்னை அடித்துவிட்டார்கள் என்று அலறிக் கொண்டு விஷால் வெளியே ஓடி வந்திருப்பார் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் பாண்டவர் அணி தான் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்று அந்த அணியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வாக்களிக்க வந்த ரமேஷ் கண்ணா கூறியதாவது, தேர்தல் ஏற்பாடுகள் எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் வாக்களிக்கத் தான் ஆட்கள் இல்லை என்றார்.

    வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் ரமேஷ் கண்ணா இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள். அதில் பெரும்பாலான வாக்குகள் நாடக கலைஞர்களுடையது.

    தேர்தல் நேரத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசினாலும் தேர்தல் முடிந்த பிறகு ஒரே குடும்பமாக ஆகிவிடுவோம் என்றார்கள் வாக்களிக்க வந்தவர்கள். விஷால் பல தரப்பில் இருந்து அதிருப்தியை சம்பாத்திதுள்ள நிலையில் இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

    English summary
    Pandavar Ani got irked after 9 people from Swamy Sankaradas team entered polling booth on Nadigar sangam election day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X