திருமணமான 8 மாதத்தில் நடிகரை பிரிந்த பிரபல பாடகி

By Siva

நியூயார்க்:பிரபல ஹாலிவுட் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தும், பாடகி மைலி சைரஸும் திருமணமான 8 மாதங்களில் பிரிந்துவிட்டனர்.

தார் படம் புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தம்பி லியாம் ஹெம்ஸ்வொர்த்தும் படங்களில் நடித்து வருகிறார். அவரும் பிரபல அமெரிக்க பாடகியான மைலி சிரஸும் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.

Miley Cyrus, Liam Hemsworth part ways

அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு பிரிவதும், சேர்வதுமாக இருந்தனர். கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேகத்தில் பிரிந்துவிட்டனர். பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தனர்.

அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்னிசியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி திருமணம் செய்யாது என்று நினைத்தவர்கள் வியந்தனர். இந்நிலையில் மைலிக்கும், லியாமுக்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கடந்த ஜூன் மாதம் செய்திகள் வெளியாகின.

அதை பார்த்த மைலி சிரஸோ, நானும் கணவரும் சந்தோஷமாக இருக்கிறோம், பிரிவுக்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவர்கள் நிஜமாகவே பிரிந்துவிட்டார்களாம்.

Miley Cyrus, Liam Hemsworth part ways

மைலி சிரஸ் நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் மைலியின் கையில் திருமண மோதிரம் இல்லை. அதை பார்த்தவர்கள் கணவன், மனைவி பிரிந்துவிட்டார்களோ என்று பேசத் துவங்கினர். இந்நிலையில் தான் அவர்கள் பிரிந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மைலி, லியாம் ஹெம்ஸ்வொர்த் ஆகியோரின் செய்தித் தொடர்பாளர் பிரபல ஆங்கில பத்திரிகையிடம் கூறியதாவது,

லியாம் மற்றும் மைலி பிரிவது என்று முடிவு செய்துவிட்டனர். இருவரும் மாறி வருவதால் கெரியர் மற்றும் தங்களின் நலனில் கவனம் செலுத்த பிரிவது தான் நல்லது என்று தீர்மானித்துவிட்டனர். அவர்கள் பிரிந்துவிட்டாலும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தொடர்ந்து நல்ல பெற்றோராக இருப்பார்கள். அவர்களின் பிரைவசிக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X