கடற்கரையில் 'பிறந்த மேனி' ஓட்டம்.. பூனம் பாண்டேவை அடுத்து பிரபல நடிகர் மீதும் வழக்குப் பதிவு!
மும்பை: கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல மாடலும் நடிகருமான மிலிந்த் சோமன், தமிழில் சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' மூலம் தமிழுக்கு வந்தார்.

அலெக்ஸ் பாண்டியன்
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார்.

வயது வித்தியாசம்
இவர், ஷூ விளம்பரத்துக்காக நிர்வாணமாக விளம்பர படத்தில் நடித்து பரபரப்பாகப் பேசப்பட்டவர். இவர், தன்னை விட பல வருட, வயது வித்தியாசம் அதிகம் கொண்ட இளம் பெண்ணான அங்கிதா கோன்வார் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

மனைவி அங்கிதா
இவர், சில நாட்களுக்கு முன் தனது 55 வது பிறந்த நாளை நேற்று கோவாவில் கொண்டாடினார். தனது மனைவி அங்கிதாவுடன் அவர் இதற்காக கோவா சென்றுள்ளார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ்
அவர் கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போல எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த போட்டோவை அவர் மனைவி அங்கிதா எடுத்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் மீம்ஸ்களாலும் ஜோக்குகளால் சோசியல் மீடியாவை திணறடித்தனர். சிலர் அவரை திட்டி இருந்தனர்.

ஏன் கைது செய்தார்கள்
இதற்கிடையே நடிகை பூனம் பாண்டே கோவாவில் நிர்வாண வீடியோ எடுத்ததற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மிலிந்த் சோமனை பாராட்டியவர்கள், பூனம் பாண்டேவை மட்டும் ஏன் கைது செய்தார்கள் என்று சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினர்.

கோல்வா போலீசார்
இதையடுத்து பூனம் பாண்டே என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்தனர். இது பரபரப்பானது. இந்நிலையில், தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள கோல்வா போலீசார், மிலிந்த் சோமன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை அந்த ஸ்டேஷனில் உள்ள போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











