லாக்டவுனுக்கு முன்னாலதான்.. அதுக்குள்ள விளைஞ்சாச்சு.. விவசாயியாக மாறிய பிரபல வில்லன் நடிகர்!

By

சென்னை: பிரபல வில்லன் நடிகர் தனது வீட்டுத் தோட்டத்திலேயே காய்கறிகளை விளைய வைத்துள்ளார்.

Recommended Video

காதலுக்கு வயது முக்கியம் இல்லை - மிலிந், அங்கிதா- வீடியோ

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளவர் மிலிந்த் சோமன்.

முன்னாள் மாடலான இவர், ஷூ விளம்பரத்துக்காக நிர்வாணமாக விளம்பர படத்தில் நடித்து பரபரப்பாகப் பேசப்பட்டவர். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்

தமிழில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்திருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

இவர், பிரெஞ்ச் நடிகை மிலனே ஜம்பனோய் என்பவரை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தன்னை விட பல வருட, வயது வித்தியாசம் கொண்ட இளம் பெண்ணான அங்கிதா கோன்வார் என்பவரை காதலித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வீட்டில் விளைந்த

வீட்டில் விளைந்த

இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டில் விளைந்த காய்கறிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில், சுரைக்காயை அவர் பறிக்கிறார். மற்றொன்றில் உயரமான பீர்க்கங்காயை காண்பிக்கிறார். அவர் வீட்டில் விளைந்த காய்கறிகளை இன்னொரு போட்டோவில் வெளியிட்டுள்ளார்.

விவசாயி ஆகிவிட்டேன்

விவசாயி ஆகிவிட்டேன்

அதில் கத்தரிக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பறித்து வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மனைவி அங்கிதா விரும்பியபடி கடைசியாக விவசாயி ஆகிவிட்டேன். சொந்தமாக விளைய வைத்த காய்கறிகளை பார்க்கும்போது மகிழ்ச்சி. லாக்டவுனுக்கு முன்பு, இந்த காய்கறி தோட்டத்தை அமைத்தேன்.

நம்ப முடியாத அழகு

நம்ப முடியாத அழகு

இப்போது பசுமையாகக் காட்சி அளிக்கிறது. பச்சை நிறத்துடன் கொஞ்சம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமும் தெரிகிறது என்று கூறியுள்ளார். இதற்கு பல நெட்டிசன்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், இது நம்ப முடியாத அழகாக இருக்கிறது. நீங்கள் எனது இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X