»   »  மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க ஆட்சேபனை இல்லை: பிரபல நடிகர் பேட்டி

மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க ஆட்சேபனை இல்லை: பிரபல நடிகர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மீண்டும் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மாடலும், நடிகருமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.

மேட் இன் இந்தியா பாடல் மூலம் மிகவும் ரசிகைகளை கவர்ந்தவர் மிலிந்த் சோமன். மாடலும், நடிகருமான அவர் தற்போது மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

51 வயதிலும் செம ஃபிட்டாக உள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

 கடவுள்

கடவுள்

ஓடும்போது நான் கடவுள் போன்று உணர்கிறேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. நான் மனிதரை விட மேலானவன் என்று உணர்கிறேன்.

தூரம்

தூரம்

ஓடத் துவங்கிவிட்டால் தினமும் கூடுதல் தூரம் ஓட முயற்சி செய்வீர்கள். அது மகிழ்ச்சியை தரும். ஓடுவதற்கு நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்று மனது நினைக்க வேண்டும்.

 மாடலிங்

மாடலிங்

நான் மாடலிங் துறைக்கு வரும் முன்பு நான் அழகாக உள்ளதாக யாருமே கூறியது இல்லை. என் பெற்றோர் கூட கூறியது இல்லை. கவர்ச்சிகரமான ஆண் என கடந்த 30 ஆண்டுகளாக அழைக்கப்படுகிறேன்.

 போட்டோஷூட்

போட்டோஷூட்

நான் விளம்பரம் ஒன்றுக்காக நிர்வாணமாக போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளேன். அந்த புகைப்படங்களால் கூட சர்ச்சை ஏற்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்.

மீண்டும்

மீண்டும்

நான் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் மிகவும் அழகானது. அதில் எனக்கு அசவுகரியமே இல்லை. என் அம்மாவுக்கு கூட அந்த புகைப்படம் பிடித்திருந்தது. மீண்டும் நிர்வாண போட்டோஷூட் நடத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றார் மிலிந்த்.

English summary
Model, actor cum runner Milind Soman said that he has no issue in doing another nude photoshoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil