பிறந்த நாளும் அதுவுமா பிறந்த மேனி போட்டோ.. இது, வேற மேனியாவா இருக்கே.. நெட்டிசன்ஸ் மீம்ஸ் கிண்டல்!

By

மும்பை: தனது பிறந்த நாளை முன்னிட்டு, பிரபல நடிகை பிறந்த மேனியாக ஓடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நடிகரை நெட்டிசன்ஸ் கிண்டலடித்துள்ளனர்.

தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன்.

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

நிர்வாண நடிப்பு

நிர்வாண நடிப்பு

பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். முன்னாள் மாடலான இவர், ஷூ விளம்பரத்துக்காக நிர்வாணமாக விளம்பர படத்தில் நடித்து பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

இவர், பிரெஞ்ச் நடிகை மிலனே ஜம்பனோய் என்பவரை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தன்னை விட பல வருட, வயது வித்தியாசம் கொண்ட இளம் பெண்ணான அங்கிதா கோன்வார் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கோவா கொண்டாட்டம்

கோவா கொண்டாட்டம்

இவர், தனது 55 வது பிறந்த நாளை நேற்று கோவாவில் கொண்டாடினார். தனது மனைவி அங்கிதாவுடன் அவர் இதற்காக கோவா சென்றுள்ளார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்குத்தானே பர்த் டே

இந்நிலையில், அவர் கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போல எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை அவர் மனைவி அங்கிதா எடுத்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் மீம்ஸ்களாலும் ஜோக்குகளால் சோசியல் மீடியாவை திணறடித்தனர்.

பிறந்த மேனியாவா

ஒருவர் லாலு பிரசாத் யாதவ் அவருக்கு உள்ளாடையும் சட்டையையும் அளிப்பதுபோல மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். என்னதான் பிறந்த நாள்னாலும் பிறந்த மேனியாவா போட்டோ போடுவீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர். சிலர் அவருடைய பிறந்த மேனி போட்டோவுக்கு உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பிறந்த நாள் பரிசு

இன்னும் சிலர், என்னங்க டிரெஸ் போட மறந்துட்டீங்களா என்றும் ஒருவர் சில உடைகளின் புகைப்படங்களை பதிவு செய்து, இது சின்ன பிறந்த நாள் பரிசு. ஆனால் முக்கியமானது. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போல பலர் ஜாலியான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X