முன்னாள் காதலியுடன் நிர்வாண போஸ்.. 25 வருடத்துக்கு பின் வெளியிட்ட நடிகர்.. தீயாய் பரவும் போட்டோ!

By

மும்பை: 25 வருடத்துக்கு முன் தனது முன்னாள் காதலியுடன் எடுத்த நிர்வாண புகைப்படத்தை பிரபல நடிகர் இப்போது வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியான பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்

தமிழில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். பின்னர், பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்திலும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் நடித்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

இவர், பிரெஞ்ச் நடிகை மிலனே ஜம்பனோய் என்பவரை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தன்னை விட பல வருட வயது வித்தியாசம் கொண்ட அங்கிதா கோன்வார் என்பவரை காதலித்தார். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

நிர்வாண புகைப்படம்

நிர்வாண புகைப்படம்

இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன், சமூக வலைத்தளத்தில், தனது முன்னாள் காதலியும் மாடலுமான மதுசாப்ரேவுடன் நிற்கும் நிர்வாண போட்டோ ஒன்றை இப்போது பதிவிட்டுள்ளார். அதில் இருவர் கழுத்திலும் மலை பாம்பு ஒன்று கிடக்கிறது. ஷூ நிறுவனம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட விளம்பர படம் அது. இந்த போட்டோ வெளியான காலகட்டத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது.

எதிர்வினைகள்

எதிர்வினைகள்

'என் டைம்லைனில் இந்த போடோவை பாருங்கள். இதற்கு வயது 25. இது வெளியான காலகட்டத்தில் இணையதளமோ, சமூக வலைத்தளங்களோ இல்லை. இப்போது இந்த போட்டோ வெளியாகி இருந்தால் என்ன மாதிரியான எதிர்வினைகள் வரும் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்' என்று அதில் கூறியுள்ளார். இந்த போட்டோ இப்போது வைரலாகி இருக்கிறது.

பேசப்படும் போட்டோ

பேசப்படும் போட்டோ

இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'விளம்பர பட உலகில் இந்த படம் இன்று வரை பேசப்பட்டு வரும் போட்டோ இது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். பலர் அப்போதைய ஃபயர் இப்போதும் இருக்கிறது என்று சிலர் கூறியுள்ளனர். ஒருவர், இணையத்தை இந்த போட்டோ இப்போதும் கலக்க போகிறது' என்று கூறியுள்ளார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இது கருப்பு வெள்ளையில் பெயின்டிங் போல இருக்கிறது என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர் மிலிந்த் நீங்கள் இன்னும் அப்படியே இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த விளம்பர படம் 1995 ஆம் ஆண்டில் வெளியான காலகட்டத்திலேயே மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மலைப்பாம்பை பயன்படுத்தியதற்காக வனவிலங்கு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X