Cook With Comali- குக் வித் கோமாளி பரிசுத் தொகை மைம் கோபி என்ன செய்யப்போறார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை:Cook With Comali (குக் வித் கோமாளி) குக் வித் கோமாளி சீசன் 4ல் வென்ற பரிசு தொகையை மைம் கோபி எதற்காக செலவழிக்கப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது குக் வித் கோமாளி. சமையல், நகைச்சுவை, பொழுதுபோக்கு என அனைத்தையும் கலந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். பிக்பாஸுக்கு பிறகு இதில் பங்குபெற்றால் போதும் பிரபலமாகிவிடலாம் என்ற நிலை இருக்கிறது. இதில் பங்கேற்றுதான் புகழ், சிவாங்கி உள்ளிட்டோரும் புகழடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mime Gopi will spend the prize money won in Cook with Komali season 4 has been revealed

மூன்று சீசன்கள்: முதல் மூன்று சீசன்களும் படு ரகளையாக சென்றது. அதில் முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டிலை வென்றார்கள். இதனையடுத்து நான்காவது சீசன் பல எபிசோடுகளாக நடந்தது. இந்த சீசனில் பிக்பாஸ் புகழ் ஷெரின், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விசித்ரா, கல்யாண், ஆண்ட்ரியான் நௌரிகட், மைம் கோபி, விஜய் விஷால், சிவாங்கி, கிஷோர் என மொத்தம் பத்து பேர் பங்கேற்றனர்.

இறுதிச்சுற்று: பல சுற்றுக்களாக நகைச்சுவையுடன் நகர்ந்த குக் விக் கோமாளி சீசன் 4 இறுதிச்சுற்று சமீபத்தில் நடந்தது. பத்து போட்டியாளர்களில் மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விசித்திரா உள்ளிட்டோர் தகுதி பெற்றனர். இதில் மைம் கோபி முதல் இடத்தை பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இதுவரை பெண்கள் மட்டுமே டைட்டிலை வென்ற சூழலில் குக் வித் கோமாளி டைட்டில் வின்னரான முதல் ஆண் என்ற பெருமையையும் கோபி பெற்றிருக்கிறார்.

ஐந்து லட்சம் ரூபாய்: அவருக்கு அடுத்த இடத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும், மூன்றாவது இடத்தை விசித்திராவும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த கோபிக்கு ஐந்து லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசு பெற்ற ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு மூன்று லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் டைட்டில் வென்ற மைம் கோபிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

என்ன செய்யப்போகிறார்: இந்நிலையில் குக் வித் கோமாளியில் வென்ற ஐந்து லட்சம் ரூபாயை மைம் கோபி என்ன செய்யப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு நல்ல மனிதராக கோபி இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் அவரை புகழ்ந்துவருகின்றனர்.

இதற்கிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனிமேல் ஒளிபரப்பப்படமாட்டாது. இதுதான் கடைசி சீசன் என்ற தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X