கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. போராடிய நடிகைக்கு பாலியல் மிரட்டல்!
சென்னை: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்தும், மிமி, தனது சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, மிமி சக்கரவர்த்தியின் பதிவுக்கு, பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில், சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்த 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. அந்த பெண் மருத்துவர் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணிபுரிந்ததாக கூறப்படுகின்றது.

பெண் மருத்துவர் கொலை: அதனால், களைப்பின் காரணமாக அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர் மருத்துவமனையின் செமினார் அறையில் சற்று ஓய்வு எடுக்க எண்ணி அங்கு தூங்கி இருக்கிறார். அதன் பின்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாள், ஆகஸ்ட் 9ந் தேதி, கொடூரமா கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக அந்த மருத்துவரின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கி உள்ள இந்த கொடூரமான கொலை குறித்து, ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
மிமி சக்ரவர்த்தி: இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தியும், ரித்தி சென், அரிந்தம் சில், மதுமிதா சர்க்கார் ஆகியோருடன் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆகஸ்ட் 14ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆதரவாக கருத்துகளும் தெரிவித்து வந்த நிலையில், தனக்கு, பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிரட்டுகின்றனர்: அதில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்த தனது பதிவுக்கு, சிலர் பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் விதமாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "நாங்கள் பெண்களின் உரிமைக்காக நீதி கோருகிறோம். ஆனால், ஆனால், விஷமிகள் சிலர் தங்களின் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு, பெண்களுக்கான பாலியல் போராட்டங்களில், பெண்களுக்கு ஆதரவாக நிற்பதுபோல நடிக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் தொடர்பாக வந்த வாசகங்களையும் அவர் வெளியிட்டுளளார்.


Click it and Unblock the Notifications











