திடீர் கருத்து வேறுபாடு.. 5 வருட திருமண வாழ்க்கை கசந்தது.. காதல் கணவரைப் பிரிந்தார் பிரபல நடிகை!
மும்பை: தனது காதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை மினிஷா லம்பா. இந்தி சினிமா மற்றும் டிவி.சிரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

சஞ்சய் தத்தின் கிட்னாப்
இந்தியில், ஜிம்மி ஷேர்கில்லுடன் யஹான் என்ற போர் பற்றிய படத்தில் அறிமுகமானவர் இவர். இந்தப் படத்தை சூஜித் சிர்கார் இயக்கி இருந்தார். இதையடுத்து மதுர் பண்டார்கரின் கார்பரேட், பர்ஹான் அக்தரின் காமெடி படமான, ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், சஞ்சய் தத் நடித்த கிட்னாப், ஆனந்த் மகாதேவன் இயக்கிய அனாமிகா, ஹம் தும் ஷபானா உட்பட பல படங்களில் நடித்தார்.

நடிக்கவில்லை
மினிஷா நடிப்பில், ஆனந்த் குமாரின் ஜில்லா காஸியாபாத், ஷியாம் பெனகலின் வெல்டன் அப்பா, பேஜா பிரை 2 படங்கள் கவனிக்கப்பட்டன. கடைசியாக சஞ்சய் தத், அதிதி ராவ் ஹைதாரி நடித்த, பூமி படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. கூடவே டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

தொழிலபதிபர்
நடிகை மினிஷா தொழிலபதிபர் ரியான் தம் என்பவரைக் காதலித்து வந்தார். இரண்டு வருடமாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ரியான், ரெஸ்டாரன்ட் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் நடிகை மினிஷா.

கருத்து வேறுபாடு
அதில் தனது ஹாட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சமீபத்தில் அவர் பதிவிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலாயின. இந்நிலையில், நடிகை மினிஷாவும் அவர் கணவரும் பிரிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாயின. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டன. சில பத்திரிகைகளில் செய்தியும் வெளியாயின.

சுமூகமாக பிரிந்தோம்
ஆனால் அது பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் நடிகை மினிஷா லம்பா. இந்நிலையில், அவர் விவாகரத்து பெற்றுவிட்டதாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 'நானும் ரியானும் பிரிந்து வாழ்வது உண்மைதான். இருவரும் சுமூகமாகவே பிரிந்துவிட்டோம். சட்டரீதியாக விவாகரத்தும் செய்துவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த செய்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











