விராலிமலை தொகுதியில் கண்ணீர்விட்ட விஜய பாஸ்கர்.. தேர்தல்கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விராலிமலை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் விட்டு அழுதது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநில கட்சிகள் தேசிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அவற்றில் சுவாரசியமான சில சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை கூறியுள்ளார்.
இதேபோல் தாமகவின் மாநில செயலாளர் கோவை தங்கம் திமுகவில் ஐக்கியமான தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும்
சிதம்பரம் அதிமுக வேட்பாளர் பாண்டியன் தன்னை வெற்றி பெறச் செய்தால் தானே வாஷிங் மெஷினை வீட்டிற்கு கொண்டு வந்து தருவதாக கூறியதையும் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் பிரச்சாரம் செய்த போது கண்ணீர் விட்டு கதறியது குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா தன்னை வெற்றி பெற செய்தால் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது உள்ளிட்ட தகவல்களையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











