தமிழ் திரையுலகம் நம்மை கௌரவப்படுத்தியுள்ளது…தனுஷ், விஜய்சேதுபதியை வாழ்த்திய அமைச்சர் !

சென்னை: தேசிய விருது பெற்ற நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

அதே போல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

தாமதமான அறிவிப்பு

தாமதமான அறிவிப்பு

நாட்டின் 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நேற்று அறிவிக்கப்பட்டன. 2019ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள், கொரோனா காரணமாக தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தனுஷ்

தனுஷ்

அசுரன் படத்துக்காகச் சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனுஷ் ஏற்கெனவே ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் அசுரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி சிறந்த துணை நடிகர்

விஜய்சேதுபதி சிறந்த துணை நடிகர்

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்கு ஜூரி விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்

சிறந்த குழந்தை நட்சத்திரம்

கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, விஸ்வாசம்' படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.

கௌரவப்படுத்தி இருக்கிறது

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் திரையுலகம் நம்மை கௌரவப்படுத்தி இருக்கிறது. தேசிய விருது பெற்ற அசுரன் படக்குழுவினருக்கும், சிறந்த நடிகராக தேர்வாகி இருக்கும் தனுஷ் அவர்களுக்கும் சிறந்த துணை நடிகராக தேர்வாகி இருக்கும் விஜய்சேதுபதி அவர்களுக்கும், ஒத்த செருப்பு இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X