வெளிநாட்டு சதிகளின் தூண்டுதலின்பேரில் விஜய் செயல்படுகிறார்: அமைச்சர் சி.வி. சண்முகம்

By Siva

தூத்துக்குடி: விஜய் வெளிநாட்டு சதிகளின் தூண்டுதலின்பேரில் செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் நலத்திட்டங்களை படத்தில் விமர்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடிப்பு

நடிப்பு

சினிமா என்ற போர்வையிலே, நடிக்கிறேன் என்ற போர்வையிலே இன்று அந்த திரைப்படத்தில் அரசின் திட்டத்தின் பொருட்களை விமர்சனம் செய்து, அதை எரிப்பது போன்ற காட்சியை காட்டி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்ற ஒரு தீவிரவாதியை போன்ற செயலை இன்று செய்திருக்கின்றார்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

அந்த படத்தின் தயாரிப்பாளரும் சரி, அந்த படத்தில் நடித்துள்ள, உத்தமனை போன்று நடித்துக் கொண்டிருக்கிற, சினிமாவிலும் மக்களிடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிற நடிகரும் சரி, அந்த படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளும் சரி, இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் இதை அரசிடம் கண்டிப்பாக வலியுறுத்துவேன்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் வன்முறையை தூண்டி, ஜனநாயக முறையிலே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு அரசை தூக்கி எறிவதற்கு எப்படி தீவிரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகள் மறைமுகமாக போராடிக் கொண்டிருக்கின்றதோ, அதே செயலை, அதே பணியை இன்றைக்கு திரைப்படம் மூலமாக ஒரு நடிகர் செய்துள்ளார்.

தூண்டுதல்

தூண்டுதல்

வெளிநாட்டு சதிகளின் தூண்டுதலின் பெயரிலே இன்றைக்கு தமிழகத்தில் கொண்டு வருகின்ற வளர்ச்சித் திட்டங்களை எல்லாம், தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவிலும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக் கூடாது, எந்த திட்டமும் நடைபெறக் கூடாது என்று ஒரு சதிக் கூட்டம் இந்தியாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சில காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜய் அவர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்கிறார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X