Ajith: அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே?அஜித் ரசிகர்களை தூண்டிவிடும் கஸ்தூரி!

சென்னை: அஜித் யார் என்று கேட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு நடிகை கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு திமுக பொதுச்செயலாளரும் , தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேட்டி அளித்திருந்தார்.

minister duraimurugan asked who is ajith, actress Kasthuri replied on Twitter

அதில் செய்தியாளரின் பல கேள்விகளுக்கு பதிலளித்த துரைமுருகனிடம், அஜித், விஜய் படம் எல்லாம் பாத்திருக்கீங்களான என செய்தியாளர் கேட்டார்.அதற்கு துரைமுருகன், அஜித்னா யாரு என்று கேட்டு செய்தியாளரையே ஒரு நிமிஷம் திக்குமுக்காட வைத்துவிட்டார். பின் சுதாரித்துக்கொண்டு தல என்று சொல்றாங்களே அவரா என்றார்.

அஜித்துனா யாரு?: இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாகி ரசிகர்கள் அவரை வெச்சு செய்துவிட்டார்கள். பாஜகவினரும் தனது பங்கிற்கு துரைமுருகன், அஜித்னா யாரு என கேட்டதை எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்தனர். அதே போல அஜித் ரசிகர்களும், துரைமுருகன் மற்றும் கலைஞரை விமர்சனம் செய்யும் வகையில், கலைஞர் கைது செய்யப்பட்ட போது தயாநிதி மாறன் ஐயோ அம்மா கொல்றாங்க என்று கத்திய வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு பழியை தீர்த்துக்கொண்டனர்.

minister duraimurugan asked who is ajith, actress Kasthuri replied on Twitter

கடும் விமர்சனம்: மேலும், சும்மா இருக்கும் சிங்கத்தை சீண்டி பாக்காதீங்க என்றும், அஜித் படத்தில் இருந்து பல வீடியோக்களை எடிட் செய்து துரைமுருகைனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சோஷியல் மீடியா பக்கம் போனாலே இந்த பஞ்சாயத்துடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

சொந்த முயற்சியில மேல வந்தவரு: இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு.. அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? என பதிவிட்டுள்ளார்.

minister duraimurugan asked who is ajith, actress Kasthuri replied on Twitter

கொண்டாடும் ரசிகர்கள்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சை நாயகி என பெயர் எடுத்துள்ளார். இவர் பேசாத டாப்பிக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமா, அரசியல், விளையாட்டு, என அனைத்திலும் புகுந்து விளையாடும் கஸ்தூரி தற்போது அஜித்தை வெகுவாக புகழ்ந்துள்ளதை பார்த்து அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X