twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முழுக்க முழுக்க ஆபாசம்.. ‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை விதிக்கப்படுமா? அமைச்சர் அதிரடி பதில்!

    |

    சென்னை: முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுமான என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

    ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

    இவர் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

    பச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்!பச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்!

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸானது. டீசர் முழுக்கவுமே டபுள் மீனிங் டயலாக் மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திரைத்துறையை சேர்ந்தவர்களும் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பாரதிராஜா கண்டனம்

    பாரதிராஜா கண்டனம்

    இயக்குநர் பாரதிராஜா காமத்தை போதிக்கவா சினிமா எடுக்கிறோம் என இரண்டாம் குத்து பட டீசருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற படங்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

    அமைச்சர் பதில்

    அமைச்சர் பதில்

    இந்நிலையில் இரண்டாம் குத்து படத்திற்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். அதாவது, தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முற்றுப்புள்ளி வைக்கப்படும்

    முற்றுப்புள்ளி வைக்கப்படும்

    திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Kadambur Raju about Irandam Kuthu movie. He says, Action will be taken to ban any film that degrades Tamil culture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X