twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

    |

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா December 21 அன்று சென்னையில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் நடந்த நிகழ்வில் செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர் சங்கத்தின் 3 தீர்மானங்கள்

    1. தமிழ் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை எற்று இருக்கிறார். அதற்கான வாழ்த்து தீர்மானம்.

    2. 20 வருடமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த சங்கத்தை புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தீர்மானம்

    3. பையனூரில் திரைப்பட நகருக்கான இடத்தில், தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டி தருவதற்காக அரசு உதவ வேண்டும்.

    இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Minister M. P. Saminathan Facilitates the Members of Tamil Producers Association with Permanent Membership Card

    விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பாளர் சங்கத்தில் குறைந்த அளவிலான தயாரிப்பாளர்களே நிறைய படங்கள் செய்து வருகிறார்கள் மீதமுள்ளவர்கள் கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறார்கள் எனவும் இதை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமெனவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ், கொரோனா காலத்தை தாண்டி தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு திரும்ப முக்கிய காரணம் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி என்றும் அரசும் தயாரிப்பாளர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அடுத்ததாக பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி "தமிழ் திரைத்துறை முன்பு முழுமையாக தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. அனைத்து முடிவும் தயாரிப்பாளர்கள் எடுத்தனர். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அதை மாற்ற வேண்டும். அதற்கு சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அமைச்சர் நம் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்" என கூறினார்.

    இதனை தொடர்ந்து பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் "நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயிக்கு விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்காத நிலை தான் சினிமாவிலும் இருக்கிறது. சங்கம் நிதி சிக்கலிலும் இருப்பதாக சொன்னார்கள். தமிழக அரசும் இம்மாதிரியான சிக்கலான நிலையில் தான் இருக்கிறது. முதல்வரிடம் உங்கள் கோரிக்கைகளை சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார். அரசு சினிமாவுக்கு இணக்கமான அரசாகவே செயல்பட்டு வருகிறது, உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றும், ஏற்கனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது.கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழிலில் சினிமா முக்கியமான ஒன்று. இந்த நிலையில் உதயநிதி போன்றவர்கள் உதவியாக இருப்பது எனக்கு மிகவும் பக்க பலமாக இருக்கிறது. திரைத்துறையில் இருந்த உதயநிதி ஸ்டாலின், இப்போது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார், அவருக்கு இந்த திரைத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும், அதனால் எனக்கு இப்போது பாரம் குறைந்தது போல் இருக்கிறது. தமிழ் சினிமா மீண்டும் வெற்றிப்பாதையில் செயல்பட நீங்கள் குழுவாக இணைந்து என்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனை அரசு செய்ய தயாராக இருக்கிறது என கூறிக்கொள்கிறேன். மானியம் வழங்குவது தொடர்பான இந்த செய்தியை நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது சீக்கிரம் நடக்க ஆவண செய்கிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.

    English summary
    Minister M. P. Saminathan Facilitates the Members of Tamil Producers Association with Permanent Membership Card and wishes the members.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X