twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “உங்கள் கையை காலாக நினைத்து நன்றி சொல்றேன்”: அமைச்சரிடம் நடிகர் போண்டா மணி உருக்கம்

    |

    சென்னை: தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி.

    மறைந்த நடிகர் விவேக், வடிவேலு உட்பட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து போண்டா மணி நடித்துள்ளார்.

    இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் போண்டா மணியை அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    Raju Srivatsava: ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது ஏற்பட்ட மாரடைப்பு.. காலமானார் காமெடி நடிகர் Raju Srivatsava: ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது ஏற்பட்ட மாரடைப்பு.. காலமானார் காமெடி நடிகர்

    அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிடாதீங்க

    அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிடாதீங்க

    தமிழில் காமெடி நடிகர் போண்டா மணியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியும் தெரியாதவர்களுக்கு வடிவேலுவுடன் அவர் நடித்த இந்த காமெடி வசனம் கண்டிப்பாக நினைவில் கொண்டு வந்துவிடும். ஒரு குளத்தில் இருந்து திடீரென வெளியே வரும் போண்டா மணி, கரையில் இருக்கும் வடிவேலுவிடம் "அவன் உன்கிட்ட என்ன சொன்னான்னு கேப்பாங்க?, ஒன்னுமே சொல்லிறாதீய... அடிச்சுக் கூட கேப்பாங்க... அப்பயும் ஒன்னும் சொல்லிறாதீய" என வடிவேலுவிடம் சொல்லிவிட்டு மறைந்துவிடுவார். கடைசி வரை வடிவேலுவுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், போலீசாரிடம் அடி வாங்குவார். இந்தக் காட்சியை பார்க்கும் யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    காமெடியில் கலக்கிய போண்டா மணி

    காமெடியில் கலக்கிய போண்டா மணி

    இப்படி முன்னணி நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேலு ஆகியோருடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் தனது வித்தியாசமான உடல்மொழி, திருட்டு முழி, அப்பாவித்தனமான பேச்சு, டயலாக் டெலிவரி போன்றவைகளால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணி, தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்

    நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்

    இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் போண்டா மணி சினிமா பிரபலங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் போண்டா மணியை, மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், போண்டா மணிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    அமைச்சருக்கு நன்றி சொன்ன போண்டா மணி

    அமைச்சருக்கு நன்றி சொன்ன போண்டா மணி

    முன்னதாக அடிக்கடி போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தற்போது நேரில் சென்று சந்தித்தது போண்டா மணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. இதனால் நெகிழ்ச்சியான போண்டா மணி, அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு நன்றி கூறியுள்ளார். உங்கள் கையை காலாக நினைத்து நன்றி தெரிவிக்கிறேன் என அமைச்சரிடம் மிக உருக்கமாக பேசியுள்ளார் போண்டா மணி. இதனால், போண்டா மணியின் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாக்கடையில் இறங்கி நடித்த போண்டா மணி

    சாக்கடையில் இறங்கி நடித்த போண்டா மணி

    பருவக் காதல் என்ற படத்திற்காக நிஜ சாக்கடையில் இறங்கி நடித்ததால் தான், போண்டா மணிக்கு நுரையீரல் பாதிப்புடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவரே கூறியிருந்தார். மேலும், சமீபத்தில் தான் சிறுநீரகங்கள் செயலிழந்த விஷயம் தெரிந்தது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல என உருக்கமாகக் கூறியிருந்தார். அதேபோல், நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து உதவினா நன்றாக இருக்கும். மயில்சாமி, பெஞ்சமின் போன்ற நடிகர்கள் பார்த்துட்டு போனதையும் கூறியிருந்தார்.

    விவேக்கை நினைவுப்படுத்திய போண்டா மணி

    விவேக்கை நினைவுப்படுத்திய போண்டா மணி

    எனது உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட செல் முருகன், நேரில் வந்து பார்த்துச் சென்றதாகவும், மறைந்த நடிகர் விவேக் உயிரோட இருந்திருந்தால் யாரிடமும் உதவி கேட்கும் நிலை வந்திருக்காது எனவும் போண்டா மணி பேசியிருந்தார். முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள போண்டா மணிக்கு, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கண்டிப்பாக உதவிக்கரம் நீட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Bonda Mani entertained people with his comedy. Currently, both kidneys have failed and he is undergoing treatment at Omanturar Multi Specialty Hospital. Minister Ma Subramanian personally met comedian Bonda Mani and inquired after his well-being. He also inquired about the treatment details.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X