கணவரின் புகைப்படம் அருகில் கலங்கியபடி நின்ற மீனா.. அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல்!

சென்னை : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் பலரும் மீனாவிற்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

வித்யாசாகர் உடலுக்கு நேரிலும் பலர் இரங்கல் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து மீனாவின் வீட்டிற்கு சென்று தற்போதும் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா சிறுவயதிலிருந்தே தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடித்தவர். தொடர்ந்து நாயகியாகவும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

மீனா மகள் நைனிகா

மீனா மகள் நைனிகா

இவர் விஜய்யுடன் இணைந்து தெறி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து அரவிந்த் சாமியுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்திருந்தார். இவரது நடிப்பு மற்றும் க்யூட் பர்பார்மன்ஸ் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து நடிப்பு

தொடர்ந்து நடிப்பு

மீனாவும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோக்களிலும் இவரை காண முடிகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று இவர் வரிசைக்கட்டி நடித்துவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் திடீரென மரணமடைந்துள்ளார்.

காலம் கடந்த ஞானம்

காலம் கடந்த ஞானம்

இந்த உயிரிழப்புக்கு பறவைகளின் எச்சம் காரணமாக கூறப்பட்டுள்து. இதுகுறித்த சரியான புரிதல் இல்லாததால் வந்த விளைவே இது என்று மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலம் கடந்த ஞானம் வீண் என்பதையே இது காட்டுகிறது. எந்த ஒரு விஷயமும் நடந்து முடிந்த பின்புதான் அதற்கான காரணங்களை நாம் தேடுகிறோம்.

சிறப்பான தம்பதி

சிறப்பான தம்பதி

சிறப்பான தம்பதியாக காணப்பட்ட மீனா -வித்யாசாகரில் தற்போது வித்யாசாகர் இல்லை. ஒன்றுமே அறியான குழந்தையை வைத்துக் கொண்டு தற்போது பரிதவித்து வருகிறார் மீனா. ஆண் குழந்தை இல்லாத நிலையில், தன்னுடைய கணவர் உடலுக்கு இறுதிச் சடங்குகளை மீனாவே மேற்கொண்டார்.

திரையுலகினர் அஞ்சலி

திரையுலகினர் அஞ்சலி

திரையுலகினர் பலர் வித்யாசாகர் உடலுக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரை பார்த்ததும் அங்கிள் என்று மீனா பரிதவிப்புடன் அவரை கட்டிக் கொண்ட நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மீனாவிற்கு பிரபலங்கள் ஆறுதல்

மீனாவிற்கு பிரபலங்கள் ஆறுதல்

மேலும் தன்னுடைய கணவரின் அஸ்தியை கையில் வைத்துக்கொண்டு மீனா வந்தது அனைவரையும் மேலும் கவலைக்கொள்ள செய்தது. மீனாவிற்கு ஆறுதலாக தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா அவரது வீட்டிலேயே உள்ளார். இந்நிலையில் தற்போது பல பிரபலங்கள் மீனாவிற்கு நேரில் ஆறுதல் தெரிவித்து வருகினற்னர்.

அமைச்சர் பொன்முடி ஆறுதல்

அமைச்சர் பொன்முடி ஆறுதல்

தமிழக அமைச்சர் பொன்முடியும் மீனாவிற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதன்போது மீனா, தனது கணவரின் புகைப்படத்தின் அருகிலேயே கவலை தோய்ந்த முகத்துடன் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையுடன் இருந்தார். தொடர்ந்து மீனாவின் வீட்டில் பிரபலங்களை பார்க்க முடிந்தது.

திரையுலகினர் ஆறுதல்

திரையுலகினர் ஆறுதல்

இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை நண்பர்களும் உறவினர்களும்தான் அளிக்க முடியும். அந்த வகையில் மீனாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறிவருவது, மனிதாபிமானம் இன்னும் மனிதர்கள் மனதில் உள்ளது என்பதை நிரூபித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X