சினிமா துறையில் அனுபவம் இல்லையா?.. விஷாலுக்கு ராஜ் மோகன் கொடுத்த பதில்!

சென்னை: அமைச்சர் ராஜ் மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன், நடிகர் விஷாலின் நம்பிக்கையை பெரும் வகையில் சிறப்பாக செயல்படுவேன் என சரியானா பதில் அளித்துள்ளார்.

விஷால் அதிருப்தி: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை அடுத்து ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதை திரும்ப பெற்றுக்கொள்ளும் படி நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கோரிக்கை வைத்தார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சரா மாண்புமிகு ராஜ் மோகன் அவங்களை நியமிச்சிருக்கிறது கொஞ்சம் வருத்தமளிக்குது. CM விஜய் நீங்கள் கடந்த 30 வருஷமா அடிமட்டத்துல இருந்து இந்த சினிமா இண்டஸ்ட்ரியோட இருக்கீங்க, உங்களுக்கு சினிமாத்துறையில் இருக்கும் பிரச்சனைகள் தெரியும். சினிமா பத்தி பெருசா எந்த அனுபவமும் இல்லாத ஒரு புது அமைச்சருக்கு எப்படித் தெரியும்? என பதிவிட்டு இருந்தார்.

Vijay CM Vishal Raj Mohan

ராஜ் மோகன் பேட்டி: விஷாலின் இந்த பதிவை பலரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன், நடிகர் விஷாலுக்கும் சேர்த்தே நான் வேலை பார்ப்பேன். அவர் நம்பிக்கையை பெரும் வருகையில் சிறப்பாக பணியாற்றி முதலமைச்சர் பெயரை காப்பாற்றுவேன். என்னை அவருக்கு தெரியாமல் இருக்கலாம் நான் அவர் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார்.

ஜனநாயகன் ரிலீஸ் எப்போ: இதைத்தொடர்ந்து ஜனநாயகம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், சென்சார் வந்த பிறகு தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் திரைப்படம் மட்டுமல்லாமல் எந்த ஒரு திரைப்படத்தையுமே அரசியல் காரணத்திற்காகவோ, வேறு எந்த காரணத்திற்காகவோ தடுத்து நிறுத்துவது தவறு, படத்திற்குரிய முறைப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜ் மோகன் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X