திரெளபதி படம் பார்த்தேன்.. பெண் பிள்ளைகளுக்கு நல்ல விழிப்புணர்வு படம்.. சொல்றது யாருன்னு பாருங்க!

சென்னை: திரௌபதி படம் பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு படம் என முக்கிய பிரபலம் ஒருவர் பாராட்டியிருக்கிறார்.

Recommended Video

அலுவலகத்துக்கு வந்து மிரட்டினார் திரெளபதி இயக்குனர்- Anchor Vikraman

நடிகை ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்துள்ள படம் திரௌபதி. இந்தப் படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை ஷீலா நடித்திருந்தார்.

இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி தயாரித்திருந்தார். கிரவுட் ஃபன்டிங் முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

இந்தப் படம் கடந்த 28ஆம் தேதி ரிலீஸானது. முதலில் தமிழகம் முழுக்க 330 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸானது. ஆனால் முதல் நாளிலேயே படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. அதேபோல் வசூலையும் குவித்தது. படத்திற்கு ஆதரவு பெருகியதை தொடர்ந்து, அடுத்த நாளிலேயே படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தலைவர்கள்

படத்தை பார்த்த தலைவர்கள்

படம் ரிலீஸாவதற்கு முன்பே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினர். பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து படத்தை பார்த்தார். இதேபோல் பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா, படத்தை பார்த்தார். பெற்றோர்கள் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

14 கோடிக்கு மேல்

14 கோடிக்கு மேல்

படம் நாடகக்காதல் சம்பவத்தை தோலுரித்துக் காட்டுவதால் படத்திற்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். படம் ரிலீஸ் ஆகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் ஏராளமான திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் 10 நாட்களில் 14 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலை குவித்துள்ளது.

படத்தை பார்த்த அமைச்சர்

இந்நிலையில் திரௌபதி படத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படக்குழுவினருடன் பார்த்து ரசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று #திரெளபதி படம் பார்த்தேன்
பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

படக்குழு நன்றி

திரௌபதி படத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று பார்த்துள்ளார். இதுதொடர்பாக திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி டிவிட்டியிருக்கிறார். திரெளபதி திரைப்படத்தை எங்களுடன் பார்த்து பாராட்டு தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார், மேலும் அமைச்சருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போட்டோக்கள் வைரல்

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாராட்டிய டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்த இயக்குநர் மோகன் ஜி, மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். படக்குழுவினருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X