twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளியன்று திரையரங்குகளை மூடக் கூடாது, படங்கள் ஓட வேண்டும்! - அமைச்சர் அதிரடி

    By Shankar
    |

    Recommended Video

    தீபாவளியன்று திரையரங்குகளை மூடக் கூடாது, படங்கள் ஓட வேண்டும்! - அமைச்சர் அதிரடி-வீடியோ

    சினிமா டிக்கட் கட்டணங்களுக்கு 10% கேளிக்கை வரி விதித்ததை கண்டித்து அக்டோபர் 6 முதல் புதிய திரைபடங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்து உள்ளார் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்.

    கேளிக்கை வரியை ரத்து செய்யவும், புதிய டிக்கட் கட்டணம் நியாயமாக இல்லை எனக் கூறி தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடுவதாக மதுரை - ராமநாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவித்து உள்ளனர்.

    Minister's order to film Industry

    கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான டிக்கட் கட்டணம் அமுல்படுத்தப்பட அரசு ஆவண செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார், கோவை ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவரும், திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணி. தீபாவளிக்கு வெளிவர உள்ள மெர்சல் படத்தின் கோவை விநியோகஸ்தர் சுப்பிரமணிதான்.

    சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தியேட்டர்களை மூடுவதால் எந்த பயனும் கிடைக்காது, அரசிடம் பேசித்தான் காரியம் சாதிக்க வேண்டுமே தவிர பகைத்துக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க மாநில அமைப்பு இவ்விஷயத்தில் உறுதியான முடிவுகள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

    இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகிணி ஆர் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கோயம்பேடு ரோகிணி காம்ப்ளக்ஸ் தியேட்டரில் படங்களை திரையிட்ட வகையில் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய 3 கோடி ஷேர் தொகையை ஒரு வருட காலமாக கொடுக்காததால் இந்த தியேட்டருக்கு ரெட் போட்டுள்ளனர் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர். இதனால் பன்னீர் சொல்வது எதையும் திரைத்துறையினர் கேட்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

    அபிராமி ராமனாதன், திருப்பூர் சுப்பிரமணி, அடையாறு கணபதி ராம் தியேட்டர் உரிமையாளர் ஜெயக்குமார் ஆகியோர்தான் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் இப்போது செல்வாக்குமிக்க நபர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

    இவர்களில் ஒருவரை தொடர்பு கொண்ட மணியான தமிழக அமைச்சர், "தியேட்டர் வரி வருவாய் மூலம் தமிழக அரசு நடக்கவில்லை. நீங்கள் தியேட்டரை மூடி வைப்பதால் தமிழ் நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆங்கில படங்கள் ரீலீஸ் ஆகவில்லை என்றால் தமிழ்ப் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும். தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதுவே அம்மா வழி நடக்கும் அரசின் ஆசை.

    எந்த திரையரங்கின் கேண்டீனிலும் நியாய விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை. அநியாயவிலைக்கு விற்று கொள்ளையடிக்கின்றனர். இதனை ஒழுங்குபடுத்த உங்களால் முடியவில்லை. நடிகர்களை விட்டு அரசை குறை கூற சொல்வதால் தமிழக அரசு தன் முடிவில் இருந்து பின்வாங்காது.

    தீபாவளி அன்று புதிய படங்கள் ரீலீஸ் ஆக வேண்டும்; தியேட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம். ஏற்கெனவே நீங்களே மூடிவிட்டு திரும்பவும் திறந்தீர்கள், அதே போன்றுதான் இந்த முறையும் அரசு கண்டுகொள்ளாது," என கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு இது மிரட்டலா? வேண்டுகோளா என்பது புரியாமல் அரண்டு போயுள்ளனர், தியேட்டர் உரிமையாளர்கள்.

    English summary
    Sources say that a minister has ordered the film industry not to close theaters on Diwali day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X