விரைவில் மின்னல் முரளியின் அடுத்த பாகம்... 3டி வடிவத்தில் உருவாகிறது

கொச்சி : நடிகர் டோவினோ தாமஸ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் மின்னல் முரளி.

ஓடிடியில் ரிலீசான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் குறித்து தயாரிப்பாளர் சோபியா பால் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

மின்னல் முரளி படம்

மின்னல் முரளி படம்

நடிகர் டோவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் ஷெல்லி கிஷோர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி இரு தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது மின்னல் முரளி. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

படத்தின் காட்சிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. படத்தை இயக்கியுள்ளார் பேசில் ஜோசப். தயாரித்துள்ளார் சோபியா பால். சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நெட்பிளக்சில் வெளியான படம்

நெட்பிளக்சில் வெளியான படம்

அப்போதுதான் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இநதப் படம் தரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படம் ரிலீசானது என்னவோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தயாரிப்பாளர் சோபியாவின் கருத்து வேறாக உள்ளது.

150 நாடுகளை சென்றடைந்த படம்

150 நாடுகளை சென்றடைந்த படம்

இந்தப் படம் தற்போது 150 நாடுகளில் தற்போது நெட்பிளிக்ஸ் மூலம் ரிலீசாகியுள்ளது. படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தால் இத்தனை நாடுகளை இந்தப் படம் சென்று அடைந்திருக்காது. படத்திற்கு தற்போது வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பாராட்டுக்கள் குவிந்து வருகினற்ன என்று அவர் கூறியுள்ளார்.

 படத்தின் அடுத்த பாகம்

படத்தின் அடுத்த பாகம்

இதற்கென நெட்பிளிக்சிற்கும் அதன் விளம்பரத்திற்கும் தான் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தின் அடுத்த பாகம் குறித்து அடுத்த மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் படம் 3டி வடிவத்தில் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X