அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரீமா சென்னின் மகன்..திடீரென டிரெண்டான போட்டோ!
சென்னை: Reema sen(நடிகை ரீமா சென்) அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரீமா சென்னின் மகனைப் பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி வருகின்றனர்.
1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நடிகை ரீமா சென். மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், மாடலிங்கில் விருப்பம் இருந்ததால் மாடலாக சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

உண்மையை சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரீமா சென் மற்றும் திரிஷா இருவருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்திருக்கும்.
மின்னலே: நடிகை ரீமா சென் 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார்.

மிரட்டலான வில்லி: தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ள ரீமா சென், தமிழில் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். இவர் சிம்புவுடன் இணைந்து வல்லவன் படத்தில் மிரட்டலான வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த படத்தில் ரீமா சென்னின் லுக்கும் நடிப்பும் சும்மா அப்படி இருக்கும்.
அம்மாவை விட அழகு: பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து, சினிமாவை ஓரம் கட்டிவிட்டு 2012 ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு ருத்ரவீர் சிங் என்கிற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் சினிமா பக்கமே தலைகாட்டாத ரீமா சென், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கணவன் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டேவை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் தனது மகனின் புகைப்படத்தைப் ஷேர் செய்து இருந்தார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட உயரமா வளர்ந்துவிட்டாரே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











