நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை தாங்கல.. 100க்கு போன் போட்ட பணிப்பெண்.. என்ன நடந்தது?

சென்னை: நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த இரு சிறுமியினர் அவசர உதவி எண்ணான 100க்கு போன் போட்ட நிலையில், போலீசார் அந்த சிறுமிகளை மீட்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தமிழ் சினிமாவின் கவர்ச்சி குயினாக ஒரு காலத்தில் நடித்து அசத்தியவர் நடிகை மும்தாஜ். சினிமா வாய்ப்புகள் குறைந்து ஆள் அட்ரஸே காணாமல் போன மும்தாஜ் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஆனால், அதன் பின்னரும் பெரிதாக அவர் திரைத்துறையில் கம்பேக் கொடுக்கவில்லை.

நக்மா கான்

நக்மா கான்

நக்மா கான் எனும் பெயர் கொண்ட மும்தாஜ் டி ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிசா படத்தில் அறிமுகமாவதற்காக மும்தாஜ் என பெயரை மாற்றிக் கொண்டார். 1999ம் ஆண்டு அந்த படம் வெளியானதும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் மும்தாஜுக்கு குவிந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் மும்தாஜ் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை

கவர்ச்சி நடிகை

ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த மும்தாஜுக்கு தொடர்ந்து ஹீரோயின் ரோல் கிடைக்காத நிலையில், கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட ஆரம்பித்தார். விஜய்யின் குஷி படத்தில் அவர் ஆடிய 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஸ்டார், ரோஜாக் கூட்டம், குத்து உள்ளிட்ட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

மும்தாஜ் வீட்டில் கொடுமை

மும்தாஜ் வீட்டில் கொடுமை

பிக் பாஸ் முதல் சீசனில் நமீதா வந்ததை போல இரண்டாவது சீசனுக்கு மும்தாஜை அழைத்து வந்தனர். அதன் பிறகு பெரிதாக மீடியா பக்கம் வராமல் இருந்த மும்தாஜ் தற்போது புகார் ஒன்றில் சிக்கி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த நிலையில், அவர்களுக்கு கொடுமை கொடுக்கப்பட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் பறந்தது தான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

100க்கு பறந்த போன்

100க்கு பறந்த போன்

கடந்த 6 வருடங்களாக சிறுமிகள் இருவரை நடிகை மும்தாஜ் வீட்டு வேலைக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், தங்களுக்கு கொடுமை கொடுக்கப்படுவதாக சிறுமி ஒருவர் அவசர எண் ஆன 100க்கு இன்று காலை போன் போட்ட நிலையில், அண்ணாநகர் ஹெச் பிளாக் 2வது தெருவில் இருக்கும் மும்தாஜின் வீட்டுக்கு விரைந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதல் பிரச்சனையா

காதல் பிரச்சனையா

இந்நிலையில், அந்த இரு பெண்களில் மேஜர் ஆன ஒரு பெண் கடந்த சில நாட்களாக செல்போனில் பல மணிநேரங்கள் பேசி வருவதாகவும், அந்த ஏரியாவில் ஒரு பையனை காதலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக நடிகை மும்தாஜ் கண்டித்தது தான் இப்படியொரு புகாரை அந்த பெண்கள் கிளப்ப காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் நடிகை மும்தாஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அந்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களையும் சென்னைக்கு வர வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைனர் பெண்ணை வேலைக்கு வைக்கலாமா

மைனர் பெண்ணை வேலைக்கு வைக்கலாமா

சிறுமிகளை வீட்டு வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் என நடிகை மும்தாஜுக்கு தெரியாதா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக குழந்தைத்தொழிலாளியை வேலை வாங்கும் குற்றத்தின் கீழ் நடிகை மும்தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை பாயுமா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X