twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இயக்குனரின் தாயார் காலமானார்… சோகத்தில் முழ்கிய திரையுலகம்!

    |

    சென்னை : இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் இன்று திடீரென காலமானார். இவருக்கு வயது 80.

    கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நம்பவே முடியல... 37 வருஷமாச்சு… அன்புள்ள ரஜினிகாந்த் படம் குறித்து மனம் திறந்த மீனா!நம்பவே முடியல... 37 வருஷமாச்சு… அன்புள்ள ரஜினிகாந்த் படம் குறித்து மனம் திறந்த மீனா!

    பிரபல பின்னணி பாடகியும், இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனனின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாம்பே படத்தில்

    பாம்பே படத்தில்

    இயக்குனர், தயாரிப்பாளர்,ஒளிப்பதிவாளர் என்ற பன்முகத்தன்மைக் கொண்டவர் ராஜீவ் மேனன். இவர், மணிஷா கொய்ராலா, அரவிந்த் சாமி நடித்து மணிரத்னம் இயக்கிய பாம்பே திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். மேலும், குரு, கடல் போன்ற திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இவர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரஹ்மானின் நெருங்கிய நண்பராவார்.

    பல படங்களை இயக்கினார்

    பல படங்களை இயக்கினார்

    மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதையும் இவர் வென்றுள்ளார். ராஜீவ் மேனன் கடைசியாக சர்வம் தாளமயம் என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.

    கல்யாணி மேனன்

    கல்யாணி மேனன்

    இந்நிலையில், ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் இன்று திடீரென காலமானார். இவர் பிரபல பின்னணி பாடகி ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடி உள்ளார். 5 வயதிலிருந்தே இசையின் மீது இவருக்கு அதீத காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முறைப்படி இசை கற்றுக்கொண்டார்.

    செவ்வானமே பொன்மேகமே பாடல்

    செவ்வானமே பொன்மேகமே பாடல்

    1973ம் ஆண்டு அபலா என்ற திரைப்படத்தின் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். இதைடுத்து, தமிழில் இளையராஜாவின் இசையில் நல்லதொரு குடும்பம் திரைப்படத்தில் செவ்வானமே பொன்மேகமே என்ற பாடலை பாடியுள்ளார்.

    ஏ.ஆர் ரகுமானின் இசையில்

    ஏ.ஆர் ரகுமானின் இசையில்

    கல்யாணி மேனன் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பல பாடல்களை பாடி உள்ளார். புதிய மன்னர்கள் திரைப்படத்தில் வாடி சாத்துக்குடி பாடலையும், காதலன் திரைப்படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார். குறிப்பாக இவர் அலைப்பாயுதே, முத்து, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களில் வெற்றிப்பெற்ற பாடல்களையும் இவர் பாடி உள்ளார்.

    ‘96‘ காதலே காதலே பாடல்

    ‘96‘ காதலே காதலே பாடல்

    விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகவும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தில் காதலே காதலே பாடலை பாடியுள்ளார். இவர் பாடிய கடைசி பாடல் இதுவாகும். கல்யாணி மேனன் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

    கல்யாணி மேனன் காலமானார்

    கல்யாணி மேனன் காலமானார்

    கல்யாணி மேனன் கடந்த சில நாட்களாக பக்கவாதம் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி சற்று முன்பு உயிரிழந்துள்ளார். இவரின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை மதியம் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. பிரபல பாடகியும், இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனனின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ராஜீவ் மேனனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    English summary
    Classical singer and Kalaimamani award winner Kalyani Menon passed away today in Chennai. she is mother of film director Rajiv Menon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X