Mirai X Review: மிராய் ட்விட்டர் விமர்சனம்.. தேஜா சஜ்ஜாவின் ஃபேண்டஸி படம் எப்படி இருக்கு?.. பிரபாஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் அதிகம் ஹிட் அடித்து வரும் நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூப்பர் ஹீரோ படங்களும், ஃபேண்டஸி படங்களும் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான லோகா திரைப்படம் 202 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இன்று தெலுங்கில் உருவான மிராய் திரைப்படம் பான் இந்தியா வெற்றியை குறிவைத்து பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது
குழந்தை பருவத்தில் இருந்தே தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் தேஜா சஜ்ஜா கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இஷ்க், அத்புதம் என வரிசையாக அந்த ஆண்டே 3 படங்களில் ஹீரொவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த ஆண்டு வெளியான ஹனுமான் திரைப்படம் அவரை பான் இந்தியா ஹீரோவாக மாற்றிவிட்டது. சூப்பர் ஹீரோ என்கிற பட்டத்துடன் தற்போது மிராய் படத்திலும் நடித்து கலக்கியுள்ளார் தேஜா சஜ்ஜா.
கிராண்ட் விஷுவல்ஸ்: பிரபல விமர்சகர் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கரான தரன் ஆதர்ஷ் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிராய் படம் Engrossing என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்தின் கிராண்ட் விஷுவல்ஸ் மற்றும் சிஜி காட்சிகளின் துல்லியம் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளார். 5க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என மார்க்கும் போட்டுள்ளார்.
பிரபாஸ் கேமியோ: மிராய் படத்தின் விஷுவல்ஸ் எல்லாம் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு அட்டகாசமாக உள்ளது. படத்தில் இடம்பெறும் பிரபாஸின் வாய்ஸ் ஓவர் காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் சர்ப்ரைஸ் கூஸ்பம்ப்ஸாக இருக்கும் என முக்கியமான விஷயங்களையும் நெட்டிசன்கள் ஸ்பாய்லர் செய்து வருகின்றனர்.
தியேட்டரே தெறிக்குது: மிராய் படத்தின் ஓபனிங்கிலேயே பிரபாஸின் வாய்ஸ் ஓவரில் தான் படம் ஆரம்பிக்கிறது என்றும் அவரது காட்சி படத்தை பெரிய பிளாக்பஸ்டர் ஆக்கிவிடும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தேஜா சஜ்ஜா படத்துக்கு பிரபாஸ் ஆர்மி மொத்தமும் தற்போது மிகப்பெரிய சப்போர்ட்டை கொடுத்து வருகிறது.
செகண்ட் ஹாஃப் ஸ்லோ: ரொம்ப எல்லாம் ஹைப்புடன் படத்துக்கு போக வேண்டாம், முதல் பாதி ரொம்பவே நல்லா இருக்கு. ஆனால், இரண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோவாகவும் தேவையில்லாத லேகும் அதிகமாகவே உள்ளது. ஆனால், கடைசியில் கிளைமேக்ஸில் ஒரு வழியாக படத்தை கட்டிக் காப்பாத்தி முடித்துள்ளனர். எனக்கு மிராய் படத்தை விட ஹனுமான் படம் தான் ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











