டாக்டர்கள் தினம்...வீடியோ வெளியிட்டு கவுரவித்த நாம் இருவர் நமக்கு இருவர் டீம்
சென்னை : கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் பயங்கர ஹிட் ஆகி வருகின்றன. அப்படி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று, நாம் இருவர் நமக்கு இருவர் 2.
இந்த சீரியலின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் மிர்ச்சி செந்தில் தான் ஹீரோவாக நடிக்கிறார். மிர்ச்சி செந்தில், ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை துவக்கி இன்று நடிகராக மாறி உள்ளார்.

ஹீரோவான மிர்ச்சி செந்தில்
சினிமா, டிவி நடிகர், ரேடியோ ஜாக்கி, பின்னணி கலைஞர் என முகங்களைக் கொண்டவர் செந்தில். அவர் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான மிக புகழ்பெற்ற சீரியலான சரவணன் மீனாட்சி முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து, சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

சினிமாக்களில் செந்தில்
இந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செந்தில். தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்தார்.

விஜய் டிவி ஹீரோ
சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய செந்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

டாக்டர்களுக்கு கவுரவம்
இந்த சீரியலின் முதல் பாகத்தில் இரட்டை வேடத்தில் நடித்த செந்தில், இரண்டாம் பாகத்தில் ரவுடி மாயன் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தேசிய டாக்டர்கள் தினம் என்பதால், கடந்த 2 ஆண்டுகளாக உயிரை பனயம் வைத்து கொரோனாவுடன் போராடி வரும் டாக்டர்களை கவுரவிப்பதற்காக நாம் இருவர் நமக்கு இருவர் டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாராட்டும் ரசிகர்கள்
இந்த வீடியோவில் இந்த சீரியலில் நடிக்கும் பலர் தோன்றி உள்ளனர். இந்த வீடியோவை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











