மிர்ச்சி சிவா மிரட்டும் சுமோ நவம்பரில் ரிலீஸ் - தெறிக்கப்போவது யார்?

சென்னை: மிர்ச்சி சிவா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் சுமோ மல்யுத்த வீரராக களம் காணும் சுமோ படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மிர்ச்சி சிவா என்றாலே எதையும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து காமெடியில் கலக்குவார். இவர் நடிப்பில் வெளியான, தமிழ் படம், தில்லு முள்ளு, வணக்கம் சென்னை, கலகலப்பு என அனைத்து படங்களும் காமெடியில் கலக்கிய படங்கள்.அதோடு தயாரிப்பாளர்களுக்கு வசூலை அள்ளிக் கொடுத்த படங்களும் கூட. அதிலும் தமிழ் படம் 2 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Mirchi Shiva Acted Sumo film will be released on November

தற்போது அதே காமெடி கதைக் களத்தில் நடித்துள்ள படம் சுமோ. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். பிப்ரவரி 14 மற்றும் ஆயிரம் விளக்கு போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

வணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் உடன் இணைந்து நடித்துள்ள படம், சுமோ. இந்தோ-ஜப்பானிஸ் படமான சுமோ, சுமோ மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம்.

ஜப்பானில் பாடல் காட்சிகளையும் படப்பிடிப்பையும் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படப்பிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் கலை கட்டியுள்ளது குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது.

நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வழக்கமான கலகலப்பு மட்டுமின்றி அதிரடியான பஞ்ச் வசனங்களும் அதிக அளவில் இடம் பெற்றிருக்கும் என்பது உறுதி.

இந்தப் படத்தின் டீசர் ஆகஸ்டு 1ஆம் தேதி வெளியாகி தமிழ்த் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியது. அதில் மிர்ச்சி சிவாவின் புதிய கெட்டப்பை பார்த்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் மிரண்டு போயுள்ளனர்.

இந்த நிலையில் சுமோ படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X