ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் கூட்டணி அமைக்கும் மிர்ச்சி சிவா, யோகி பாபு!
சென்னை : இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர் கண்ணன் இப்பொழுது தள்ளிப்போகாதே மற்றும் எரியும் கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.
அனைத்து தரப்பு ஆடியன்ஸுக்கும் பிடிக்கின்றவாறு தொடர்ந்து கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு கூட்டணி மீண்டும் இணைகிறது.

தனித்துவமான காமெடி
யோகி பாபு இப்போது தமிழ் சினிமாவில் மிக பிஸியான காமெடியனாக வலம் வந்த கொண்டுள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த்,விஜய்,அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து காயப்படுத்தாத தனித்துவமான காமெடியின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

காமெடிக்காகவே
மிர்ச்சி சிவா, யோகி பாபு இணைந்து நடித்திருந்த கலகலப்பு மற்றும் கலகலப்பு 2 காமெடிக்காகவே திரையரங்குகளில் சக்கை போடு போட்டது என்பது பலருக்கும் தெரிந்ததே. மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மிர்ச்சி சிவா இப்பொழுது ராம்பாலா இயக்கத்தில் இடியட் மற்றும் சுமோ ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இதில் இடியட் இன்னும் ஓரிரு மாதங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

மீண்டும் அதர்வாவுடன்
பூமராங் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாது என்ற படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி வருகிறார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்த நின்னுக்கோரி தமிழ் ரீமேக் தள்ளிப் போகாதே என்ற பெயரில் உருவாகியுள்ளது . இதில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இதையடுத்து நகுல் ,சுனைனா இணைந்து நடித்துள்ள எரியும் கண்ணாடி படத்தையும் கண்ணன் இயக்கி தயாரித்துள்ளார்.
Recommended Video

காமெடி கலாட்டா நிறைந்த
இந்த நிலையில் ஆர்.கண்ணன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி காம்போவான மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு மீண்டும் இணைய உள்ளனர். காமெடி கலாட்டா நிறைந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் இதர நடிகர் நடிகைகள் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











