தள்ளிப் போன ஜீவா - மிர்ச்சி சிவாவின் கோல்மால் படம்... மொரீசியசில் மீண்டும் சூட்டிங்

சென்னை : பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா -மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவரும் படம் கோல்மால்.

இந்தப் படத்தின் காட்சிகள் மொரீசியசில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பின்பு மீண்டும் மொரீசியல் செல்லவுள்ளனர்.

கோல்மால் படம்

கோல்மால் படம்

நடிகர் மிர்ச்சி சிவா, ஜீவா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கோல்மால். இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் மொரீசியசில் 25 நாட்கள விறுவிறுப்பாக நடைபெறறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

மிர்ச்சி சிவா மற்றும் ஜீவா இருவரும் முன்னதாக கலகலப்பு 2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது நடிப்பு அந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் சுந்தர் சி படத்தை இயக்கியிருந்தார்.

 விறுவிறு சூட்டிங்

விறுவிறு சூட்டிங்

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் கோல்மால் படத்தில் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

ஜனவரியில் மீண்டும் சூட்டிங்

ஜனவரியில் மீண்டும் சூட்டிங்

ஜாகுவார் ஸ்டூடியோசின் சார்பில் பி வினோத் ஜெயின் படத்தை தயாரித்து வரும் நிலையில், படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்பை தொடர ஜனவரியில் மொரீசியஸ் செல்லவுள்ளனர். இந்நிலையில் படத்தின் சூட்டிங் சிறப்பாக நடைபெற்று வருவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் மகிழ்ச்சி

டைரக்டர் மகிழ்ச்சி

சிவா மற்றும் ஜீவா இருவரும் நகைச்சுவை உணர்வு அதிகமாக உள்ளவர்கள் என்றும் அவர்களுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் பொன்குமரன் தெரிவித்துள்ளார். படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பேசப்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

லிங்கா கதையை எழுதியவர்

லிங்கா கதையை எழுதியவர்

படத்தில் பாயல் ராஜ்புத். தான்யா ஹோப், யோகிபாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, வையாபுரி, ரமேஷ் கண்ணா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரஜினியின் லிங்கா படத்தின் கதையை எழுதிய பொன்குமரன் கன்னடத்தில் விஷ்ணுவர்தனா, எஜமானா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர்.

நேரடி படம்

நேரடி படம்

மேலும் தமிழ் -கன்னடத்தில் வெளியான சாருலதாவையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் நேரடியாக இவர் கோல்மால் படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு அருள் தேவ் இசையமைத்து வருகிறார். படம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாக உள்ளதான கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X