’கோட்’ படத்துல நடிக்காமல் போனது ஏன்?.. அகில உலக சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பரான பதில்!

சென்னை: நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள சூதுகவ்வும் 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாக போகிறது. அதற்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கத் தொடங்கி விட்டார். சூதுகவ்வும் படத்தைத் தொடர்ந்து கலகலப்பு 3 படத்திலும் நடிக்கப் போவதை உறுதி செய்துள்ளார் சிவா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்றும் வெங்கட் பிரபு உங்களை அழைக்க வில்லையா என்கிற கேள்விக்கும் தனது பாணியில் செம சூப்பரான பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார் சிவா.

Mirchi Shiva reveals why he didn t act in Vijay s GOAT movie

12 பி, ஆளவந்தான் மற்றும் விசில் உள்ளிட்ட படங்களில் அடையாளம் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவா சென்னை 600028 படத்தில் தான் நடிகராக அறிமுகமானார்.

வெங்கட் பிரபு படத்தில் அறிமுகம்: சிவாவின் அறிமுக படமே வெங்கட் பிரபு இயக்கத்தில் தான். காதல், நட்பு, பாசம், விளையாட்டு, காமெடி என முதல் படத்திலேயே தான் ஒரு அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதை ப்ரூவ் பண்ணியிருப்பார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் நடித்த மிர்ச்சி சிவா அடுத்ததாக சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அதன் இரண்டாம் பாகத்திலும் மிர்ச்சி சிவா சிறப்பாக நடித்து கலக்கினார்.

Mirchi Shiva reveals why he didn t act in Vijay s GOAT movie

தமிழ்ப்படம் 3 வருமா?: சூது கவ்வும் 2 படத்தில் நடித்து முடித்துள்ள சிவா அடுத்ததாக கலகலப்பு மூன்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தமிழ்ப்படம் மூன்றாம் பாகம் எப்போது வரும் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. தமிழ்ப்படம் 3 விரைவில் வரும் என்றும் கேஜிஎஃப் போன்ற பல பெரிய படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அதை வைத்து நல்லாவே ஸ்பூஃப் செய்யலாம் என சிவா பேசியுள்ளார்.

கோட் படத்தில் நடிக்காதது ஏன்?: வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028, சரோஜா, சென்னை 600028 - 2ம் பாகம், பாட்டி உள்ளிட்ட படங்களில் சிவா நடித்துள்ள நிலையில் மங்காத்தா, மாநாடு கோட் போன்ற படங்களில் நடிக்காதது ஏன் என்கிற கேள்விக்கு, எப்போதுமே எனக்கான கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு எழுதினால் என்னை அழைப்பார் இல்லையென்றால் என்னை வேண்டுமென்றே இன்செர்ட் செய்யுங்கள் என அடம்பிடிக்க மாட்டேன் என நச்சென பதில் அளித்துள்ளார். ஒரு இயக்குனருக்கு தெரியும் அந்தப் படத்திற்கு யார் தேவை யார் தேவை இல்லை என்பது என்றும் பதிலளித்துள்ளார். கோட் படத்தை அவர் வேறலெவலில் எடுத்து வருகிறார் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அந்தப் படம் அமையும் என எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளார்.

Mirchi Shiva reveals why he didn t act in Vijay s GOAT movie

சூதுகவ்வும் லிங்க் இருக்கு: சூது கவ்வும் படத்தின் ப்ரீக்வெலாக இந்த படம் ஆரம்பிக்கும் என்றும் இதில், சூது கவ்வும் படத்தின் சரியான லிங்க் இருக்கிறது. விஜய்சேதுபதி இந்த படத்தை கல்ட் படமாக நடித்திருப்பார். நான் என்னுடைய ஸ்டைலில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். நிச்சயம் சூது கவ்வும் ரசிகர்களை இந்த இரண்டாம் பாகம் திருப்திப்படுத்தும் என நம்புகிறோம். ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களும் படத்தில் உள்ளன. படம் வெளியானதும் பார்த்து ரசியுங்கள் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X