மிர்ச்சி சிவாவின் "இடியட்" நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது!
சென்னை : மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இடியட் திரைப்படம்.
தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களையும் இயக்கியிருந்த ராம்பாலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
வித்தியாசமான காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இடியட் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

தமிழ் படம்
தமிழில் வெளியான படங்களை கலாய்த்து தமிழ் படம் என்ற பெயரிலேயே நடித்து அதில் வெற்றியும் கண்ட மிர்ச்சி சிவா முதல் பாக வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் இரண்டாம் பாகத்திலும் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். தனித்துவமான காமெடி மற்றும் கவுண்ட்டர்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் சிவா .

மிகப்பெரிய ஹிட்
விஜய் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளு சபா என்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா, சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்குதுட்டு என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார். பேய்களை கொடூரமாக காட்டிக்கொண்டிருந்த படங்களுக்கு மத்தியில் பேய்கள் என்றால் கொஞ்சமும் மதிக்கக் கூடாது அவர்களை வைத்து காமெடி செய்யலாம் என ராம்பாலா இயக்கியிருந்த தில்லுக்கு துட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இயக்குனர் ராம்பாலா
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகமும் அதே கூட்டணியில் உருவாகி இருக்க மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்தனர். பேய்களை வைத்து காமெடி செய்வது சுலபமாக வருகிறது என்பதால் அதே பாணியில் இப்பொழுது இடியட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்பாலா. மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி இதில் லீட் ரோலில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
Recommended Video

ஆகஸ்ட் மாதம்
மேலும் இப்படத்தில் கருணாகரன், ரவிமரியா,ஊர்வசி,ஆனந்தராஜ், மயில்சாமி என பலர் நடித்துள்ளனர். காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இடியட் தயாராகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதன் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இடியட் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











