முட்டாள்கள் தினத்தில் ரசிகர்களை சந்திக்கும் இடியட்... ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : நடிகர் மிர்ச்சி சிவா, தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.
இவரது நக்கலான பாடி லாங்க்வேஜுக்கு ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.
இவரது நடிப்பில் இடியட் என்ற படம் உருவாகியுள்ளது. இதன் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மிர்ச்சி சிவா
நடிகர் மிர்ச்சி சிவா பல காமெடி படங்களில் ஹீரோவாகவும் காமெடியனாகவும், இரண்டு நாயகர்களில் ஒருவராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நாயகனாகவே நடித்தாலும் படத்தில் காமெடி தூக்கலாகவே இருக்கும். தன்னுடைய நக்கலான பாடி லாங்குவேஜ் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்னிடம் கொண்டுள்ளார் சிவா.

இடியட் படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் கலகலப்பு 2 படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வரும் சிவா நடிப்பில் தற்போது இடியட் என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க ஹாரர் காமெடி கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுளளது.

நிக்கி கல்ராணி ஜோடி
இந்தப் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் புகழ்பெற்ற ராம்பாலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவாவிற்கு ஜோடியாகியுள்ளார் நிக்கி கல்ராணி. இந்தப் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் புகழ்பெற்ற ராம்பாலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவாவிற்கு ஜோடியாகியுள்ளார் நிக்கி கல்ராணி.

ரிலீசுக்கு தயாராகும் இடியட்
மேலும் படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயில்சாமி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ்
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் மிர்ச்சி சிவாவின் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











