மிர்ச்சி சிவாவின் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படம் பூஜையுடன் துவங்கியது!
சென்னை : தில்லுக்கு துட்டு 2 பாகங்களையும் இயக்கி வெற்றி இயக்குனராக உள்ள ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா இப்பொழுது இடியட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து காசேதான் கடவுளடா தமிழ் ரீமேக்கிலும் நடித்து முடித்துள்ள மிர்ச்சி சிவா இப்பொழுது புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும் மிர்ச்சி சிவா இப்பொழுது அதே பார்முலாவில் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

இடியட்
தனது இயல்பான கவுன்டர் காமெடிகளின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் மிர்ச்சி சிவா தனித்துவமான காமெடி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் . சந்தானம் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ராம்பாலா அதை தொடர்ந்து தில்லுக்குதுட்டு இரண்டாவது பாகத்தையும் இயக்கி அதிலும் வெற்றி கண்டவர். அதையடுத்து இப்போது மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் இடியட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

காசேதான் கடவுளடா
இந்த முறையும் பேய்களை கதற கதற கலாய்க்கும் படமாக இடியட் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து ஆர் கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
இந்த நிலையில் அடுத்ததாக மிர்ச்சி சிவா அறிமுக இயக்குனர் உடன் இணைய உள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் படம் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்". இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்குகிறார்.

ஃபேண்டசி ஜானரில்
மிர்ச்சி சிவாவின் முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் காமெடி கலந்த ஃபேண்டசி ஜானரில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது . இதன் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
இவர்களுடன் பாடகர் மனோ, விஜய் டிவி மாகாபா ஆனந்த், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை வித்யா வினு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார் .லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு கொரியோகிராஃபி செய்கிறார். சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.


Click it and Unblock the Notifications











