சூப்பர் ஸ்டார் இந்தியளவில் மட்டும் தான்.. என் ரேஞ்சே வேற.. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா அதிரடி!

சென்னை: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நடிகர்கள் மத்தியில் அடிக்கடி சண்டை நடைபெற்று சர்ச்சை வெடித்து வருகிறதே உங்கள் டைட்டிலுக்கு ஏன் எந்த சர்ச்சையும் வரவில்லை என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு சிவா அளித்த அட்டகாசமான பதில் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிவா நடித்துள்ளார். தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2வில் நடித்த சிவாவுக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்தை சி.எஸ். அமுதன் சூட்டியிருந்தார்.

mirchi siva soodhu kavvum 2 rajinikanth 2

சூது கவ்வும் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், அந்த படத்தின் புரமோஷன் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சிவா சிரித்துக் கொண்டே என் பட்டத்துக்கு யாருமே போட்டியிட முடியாது எனக் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சண்டை: நடிகர் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக அழைத்து வரும் நிலையில், டோலிவுட்டில் மகேஷ் பாபுவை சூப்பர் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூப்பர் ஸ்டார் என விஜய்யை சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய் தொடர்ந்து தனது படங்களில் தளபதி என்கிற டைட்டிலை தான் பயன்படுத்தி வருகிறார். இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுகிறார் என பஞ்சாயத்தை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் காக்கா - கழுகு சண்டை வரை வரம்புமீறி சென்று பெரும் பிரச்சனையை உருவாக்கியது.

அகில உலக சூப்பர் ஸ்டார்: சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் சிவாவுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. காமெடி ஹீரோவாக மாறிய சிவா அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிற டைட்டிலை தொடர்ந்து தனது படங்களுக்கு அவர் பயன்படுத்தி வரும் நிலையில், அதுதொடர்பான கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

எனக்குப் போட்டியே இல்லை: சூப்பர் ஸ்டார் பட்டம் தமிழ்நாடு மற்றும் இந்தியளவில் தான். ஆனால், அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் உலகத்தை தாண்டி, யூனிவர்ஸ் தாண்டி, பிளாக் ஹோல எல்லாம் தாண்டி போய்விட்டது. எனக்கு யாருமே போட்டி கிடையாது. அந்த பட்டத்துக்கு முதலும் கடைசியும் நான் மட்டும் தான் என நச்சென பேசி அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.

சூது கவ்வும் 2 ரிலீஸ் எப்போ?: யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக மிர்ச்சி சிவா நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் மெகா ஹிட் அடித்த நிலையில், 2வது பாகத்தை கெடுக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X