Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆளவந்தான்ல நடிக்கும்போது கமல் சார் கேட்ட அந்த கேள்வி.. இன்னும் என்னால மறக்க முடியல!
சென்னை : ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்து கலகலப்பான காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் நடிகர் மிர்ச்சி சிவா
தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 பாகங்களைத் தொடர்ந்து ராம் பாலா இயக்கத்தில் வெளியாகியுள்ள இடியட் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மிர்ச்சி சிவா ஆளவந்தான் படத்தில் கமல் என்னிடம் கேட்ட கேள்வி இன்னும் என்னால மறக்க முடியல என மனம் திறந்து பேசியுள்ளார்
முட்டாள்கள் தினத்தில் ரசிகர்களை சந்திக்கும் இடியட்... ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அதற்கு முன்பாகவே 12B , ஆளவந்தான், விசில் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றிருப்பார். இருப்பினும் சென்னை 600028 இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது அதை தொடர்ந்து மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சரோஜா என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பக்காவாக பொருந்தியது
இந்த நிலையில் அதுவரை தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களையும் கலாய்த்து இயக்குனர்பி எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்ததோடு பாராட்டுகளையும் பெற்றார். பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களையும் இந்தப் படத்தில் பங்கமாக கலாய்த்து வைத்திருப்பார்கள். தமிழ் படம் மிர்ச்சி சிவாவுக்கு பக்காவாக பொருந்தியது. தமிழ் படத்திற்கு கிடைத்த மாபெரும் ஆதரவை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக தமிழ் படம் பாகம் 2 வெளியாகி அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் பேய்களை கலாய்த்து
தில்லுக்கு துட்டு 2 பாகங்களை இயக்கிய வெற்றிகளை கொடுத்த இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் அடுத்ததாக மீண்டும் பேய்களை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் இடியட். மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்திருந்த இந்தப் படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. வழக்கம்போல பேய்களை இந்த படத்திலும் பாரபட்சமில்லாமல் கலாய்த்து இருந்தது பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பார்ட்டி,சுமோ,சலூன், கோல்மால், காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் மிர்ச்சி சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆளவந்தானில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்

கமல் சார் கேட்ட அந்த கேள்வி
நடிகர் கமல்ஹாசன் இயக்கி இரட்டை வேடத்தில் நடித்திருந்த ஆளவந்தான் படத்தில் இடம்பெறும் பார்ட்டி பாடலில் மிர்ச்சி சிவா வந்து செல்வார். அந்த பாடலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பில் திடீரென வந்த கமல்ஹாசன் அருகில் இருந்த டம்ளரை உடைத்து விட்டு இது என்ன கிளாஸ் தெரியுமா என என்னிடம் கேட்டார்.. இது வேற கிளாஸ் இதுல ஒயின் ஊத்தக் கூடாது.. ஒயின் கிளாஸ் வேற இந்த கிளாஸ் வேற என அந்த அளவுக்கு டீட்டெயில் பார்த்தது எனக்கு பிரமிப்பாக இருந்தது. என்னால் மறக்கவே முடியாது என கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.