இது ’மிர்ச்சி’ விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு.. என்ன பெயர் தெரியுமா?

சென்னை: டிவி தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஆர்.ஜே என பல சிறப்புகளுக்கு சொந்தகாரர் 'மிர்ச்சி' விஜய் இப்போ அப்பா என்ற அந்தஸ்த்தையும் அடைந்துள்ளார்.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக பணிபுரிந்து அனைவரது மனங்களையும் தனது பேச்சால் மகிழ்வித்து வந்தவர் விஜய்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ஒரு குட்டி ஸ்டோரியாய் கூறியுள்ளார்.

ஒரு வருஷம் ஆகிடுச்சு

ஒரு வருஷம் ஆகிடுச்சு

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி பிரபல டிவி தொகுப்பாளர் ‘மிர்ச்சி' விஜய்க்கும், மோனிகா தங்கராஜ் என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்னதாக தனது மனைவியுடன் திருமணத்திற்காக எடுத்த வெட்டிங் போட்டோஷூட் போட்டோவை போட்டு திருமண வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

சூப்பர் கிட்ஸ்

சூப்பர் கிட்ஸ்

கலர்ஸ் தமிழ் சேனல் ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகர் சிவா தொகுத்து வழங்கி வந்தார். பின்னர், அவர், படங்களில் பிசியான உடன், அந்த ஷோவை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் ‘மிர்ச்சி விஜய்'. சிரித்துக் கொண்டே பேசும் இவரது நகைச்சுவையான பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மிர்ச்சி விஜய்யின் குட்டி ஸ்டோரி

மிர்ச்சி விஜய்யின் குட்டி ஸ்டோரி

இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட பிரபலங்கள் கர்ப்பமாகியும், குழந்தை பிறந்தும் சந்தோஷமாக தங்களின் வாழ்க்கை தருணங்களை என்ஜாய் செய்து வருகின்றனர். மிர்ச்சி விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என கூறிவிட்டு, தனது மனைவி கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறந்த கதை வரை கூறி விட்டு, ஒரு குட்டி பிறந்தது தான் சார் ஸ்டோரியே எனக் கூறியுள்ளார்.

Recommended Video

குறும்பட இயக்குனர் ஆன நடிகர் உதயா | ACTOR UDHAYA CHAT | SECURITY SHORTFILM | FILMIBEAT TAMIL
அழகான ஆண் குழந்தை

அழகான ஆண் குழந்தை

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வில்லை என்றாலும், தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றும், குழந்தைக்கு 'நவிலன்' என்ற பெயரை சூட்டி இருப்பதாகவும் தனது பதிவில் ‘மிர்ச்சி' விஜய் குறிப்பிட்டுள்ளார். அப்பாவான குஷியில் இருக்கும் விஜய்யை அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X