முதலிரவில் சரக்கு அடிக்கும் மிருணாளினி ரவி.. பால் சொம்புடன் பாவமா இருக்கும் மாப்பிள்ளையை பாருங்க!

சென்னை: படம் வெளியாகும் முன்பே சம்மர் பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. சமீப காலமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்னமும் அரை டஜன் படங்களில் நம்பிக்கையுடன் மனுஷன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரோமியோ படத்தை ரொம்பவே நம்பி இப்பவே சம்மர் பிளாக்பஸ்டர் என பெரிய படங்கள் மோதவுள்ள சம்மரில் நாங்களும் வந்து சம்பவம் செய்ய காத்திருக்கிறோம் என சீட் போட்டு விட்டனர்.

Mirnalini Ravi poses with whiskey bottle at first night in Vijay Antonys Romeo

விஜய் ஆண்டனியின் ரோமியோ: இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை மற்றும் ரத்தம் உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அடுத்ததாக ரோமியோ எனும் படம் வரும் சம்மருக்கு வெளியாகிறது.

மொரட்டு ரொமான்ஸ்: விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாலினி ரவி நடிப்பில் உருவாகி வரும் ரோமியோ படம் சம்மருக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம கலர்ஃபுல்லாகவும் கலக்கலாகவும் வெளியாகி உள்ளது. மொரட்டு ரொமான்ஸ் என விஜய் ஆண்டனி பக்காவாக கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.

மணமகள் கையில் விஸ்கி: பால் சொம்புடன் விஜய் ஆண்டனி இருக்க ஃபர்ஸ்ட் நைட்டில் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி ரவி இருக்கும் வித்தியாசமான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கணவன், மனைவி இடையே நடக்கும் காமெடி காட்சிகளுடன் இந்த படம் உருவாகி வருகிறது என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. நிறைய நம்பிக்கையுடன் சம்மர் பிளாக்பஸ்டர் என ஃபர்ஸ்ட் லுக்கிலேயே வெற்றிப்படம் என அறிவித்து இருக்கும் இந்த படம் விஜய் ஆண்டனிக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். தொடர்ந்து நெகட்டிவ் டைட்டிலாக வைத்து வந்த நிலையில், ரோமியோ என ரொமாண்டிக் டைட்டில் வைத்திருக்கும் நிலையில், ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X