மகா சிவராத்திரி.. ஈஷா யோகா மையத்துக்கு படையெடுத்த நடிகைகள்.. யாரெல்லாம் போயிருக்காங்கனு பாருங்க!
கோவை: ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை நிறுவப்பட்டதில் இருந்தே மகாசிவராத்திரி விழா அங்கு களைகட்டத் தொடங்கி உள்ளது. நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என பல முன்னணி நடிகைகள் ஆண்டு தோறும் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. காலை முதலே #Mahashivratri ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு படையெடுத்துள்ள முன்னணி நடிகைகள் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும்
காசியில் தொடங்கி ராமேஸ்வரம் வரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, சிதம்பரம், காசி விஸ்வநாதர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் பிரம்மாண்டமாக மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறும். வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள ஆதியோகி சிலைக்கு முன் அமர்ந்து விடிய விடிய கண் விழிக்க பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஈஷா யோகா மையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

சமந்தா முதல் தமன்னா வரை
ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் நடிகைகள் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், பிரணிதா உள்ளிட்ட பலர் இதுவரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு ஜக்கி வாசுதேவ் உடன் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். நடிகை சமந்தா சாகுந்தலம் பட போஸ்டரை போட்டு காலையிலேயே மகாசிவராத்திரி வாழ்த்துகளை சொல்லி விட்டார்.

கோப்ரா பட நடிகை
சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மிருணாளினி ரவி மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்துக்கு படையெடுத்துள்ளார். ஆதியோகி சிலை முன்பாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு 'வைப்ஸ்' என கேப்ஷன் கொடுத்துள்ளார். நைட் குருஜி கூட ஆட்டம் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மம்தா மோகன்தாஸ்
எனிமி படத்தில் நடித்த மிருணாளினி ரவியை தொடர்ந்து அதே படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை மம்தா மோகன்தாஸும் தனது காரில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இன்று இரவு நடைபெற உள்ள மகாசிவராத்திரிக்கு குடும்பத்துடன் எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு ஈஷா யோகா மையத்துக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேகா ஆகாஷ் வழிபாடு
ஆதியோகி சிலைக்கு முன் நடிகை மேகா ஆகாஷ் வழிபாடு நடத்தும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கோலிவுட்டில் இருந்து பல முன்னணி நடிகைகள் ஈஷா யோகா மையத்தில் மையம் கொண்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











