மிருகா ட்ரைலரே அசத்தல் : ஸ்ரீகாந்த் ராய் லட்சுமி ஜோடியா புலியோடு மோதப்போறாங்க

சென்னை: மிருகா படத்தில் ட்ரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. திரில்லர் படத்திற்கென்ற தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அவர்களுக்கு நிச்சயம் இந்த மிருகா படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. நடிகர் நடிகையையும் தாண்டி புலி இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பார்த்திபன். மிருகா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி ஜோடி சேர்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

Mirugaa Movie official trailer released

நடிகர் ஸ்ரீகாந்த் அழகான ஹீரோவாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் போராடிக்கொண்டு இருக்கிறார். நடிகர் பிரசாந்த்தைப் போலவே வரும் வெற்றிப் படத்தை கொடுத்து மிக நீண்ட வருடங்களாகிவிட்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எவ்வளவோ முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்துவிட்டார்.

இருந்தாலும் கூட இவருக்கான நல்ல வாய்ப்பு இன்னும் வராமல் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறது. சொந்தமாக படம் எடுத்து வெளியிட்டார். ஆனால் அதுவும் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டது. தற்போது மீண்டும் மிருகா படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரே படு மிரட்டலாக உள்ளதால் படத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர்களோடு சேர்ந்து புலியும் இருப்பதால் படத்திற்கு வரவேற்பு கூடுதலாக இருக்கும் என நம்பலாம்.

திரில்லர் படத்திற்கென்ற தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அவர்களுக்கு நிச்சயம் இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. நடிகர் நடிகையையும் தாண்டி புலி இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவதால் நிச்சயம் புலி வரும் காட்சிகள் குழந்தைகளுக்கு இது விருப்பமான படமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

மலையாளத்தில் 2016ஆம் ஆண்டில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் சாயல் இப்படத்தில் இருக்குமோ என்ற தோன்றுகிறது. இப்படத்தில் புலி மலை கிராம மக்களை அடித்து கொன்று அவர்களுக்கு பல வகைகளில் தொல்லை கொடுக்கும்.

அதில் புலி முருகனாக வரும் மோகன்லால் புலியை வேட்டையாடி மக்களை புலியிடம் இருந்து காப்பாற்றுவான். புலி வேட்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த மலையாள படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. மோகன்லாலுக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

பெரிதாக பேசப்பட்ட புலி முருகன் கதையின் சாயலில் இருக்குமா இந்த மிருகா படம் என்று படம் வெளியான பிறகு தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X