வேகமாக வந்த கார்.. பிரபல நடிகர் வீட்டுக்குள் நுழைய முயற்சி.. மிரட்டல் விடுத்த 4 பேர் அதிரடி கைது!

By

ஐதராபாத்: பிரபல நடிகர் வீட்டுக்குள் புகுந்து மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். சுர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

நடிகை லட்சுமி மஞ்சு

நடிகை லட்சுமி மஞ்சு

இந்தப் படத்தில் அவர் சூர்யாவுக்கு வழிகாட்டியாக நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக, இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. நடிகர் மோகன் பாபுவுக்கு மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகிய மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். முன்று பேரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். லட்சுமி மஞ்சு, தமிழிலும் கடல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

மோகன்பாபு இருக்கிறாரா?

மோகன்பாபு இருக்கிறாரா?

நடிகர் மோகன்பாபுவுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜல்லப்பள்ளியில் பங்களா உள்ளது. இங்கு குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார். இங்கு நேற்று மாலை ஒரு டொயட்டோ கார் வேகமாக வந்தது. பங்களாவின் கேட்டுக்கு அருகே வந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினர். உள்ளே மோகன்பாபு இருக்கிறாரா? என்று செக்யூரிட்டிகளிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நீங்கள் யார், என்ன விவரம் என்று கேட்டுள்ளனர்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

அப்போது அவர்கள் செக்யூரிட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை மிரட்டினர். இந்த தகவலை நடிகர் மோகன்பாபுவுக்கு அவர்கள் தெரிவித்தனர். இது தெரிந்ததும் அவர்கள் கேட்டில் இருந்து வேகமாக காரில் ஏறி தப்பி ஓடினர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவரும் நடிகை லட்சுமி மஞ்சுவும் பஹடிஷரிபஃப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

வீடியோ காட்சிகளையும் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மைலர்தேவ்பள்ளி, துர்கா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா, ஆனந்த், டேவிட், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் AP 31 AN 0004 என்ற இன்னோவா காரில் நடிகர் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அந்த கார் விஜயலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது. எதற்காக அவர்கள் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X