கிட்னி பிரச்னையால் இறந்துவிட்டேனா? பெயர் குழப்பத்தால் வந்த சிக்கல்.. அதர்வா ஹீரோயின் அதிர்ச்சி!

By

மும்பை: சிறுநீரகப் பிரச்னை காரணமாக இறந்து போன நடிகை நான் இல்லை என்று அதர்வா பட ஹீரோயின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியில், லைஃப் கி தோ லக் கயி என்ற படம் மூலம் அறிமுகமானவர் மிஸ்டி முகர்ஜி.

மெய்ன் கிருஷ்ணா ஹுன், கோவிந்தா ஆலே ரே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

இசை ஆல்பங்கள்

இசை ஆல்பங்கள்

பல படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார். இசை ஆல்பங்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக கீட்டோ (keto diet) என்ற டயட் முறையை பின்பற்றி அதன்படி உணவு உண்டு வந்துள்ளார். இதில் அவருடைய கிட்னி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

இதையடுத்து பெங்களூரில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 27. இதை அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடந்துள்ளது. நடிகை மிஸ்டி முகர்ஜியின் மறைவு இந்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

மிஸ்டி சக்கரவர்த்தி

மிஸ்டி சக்கரவர்த்தி

இந்நிலையில், பெயர் குழப்பம் காரணமாக மிஸ்டி முகர்ஜிக்கு பதிலாக நடிகை மிஸ்டி சக்கரவர்த்தி இறந்துவிட்டதாக, சில வட இந்திய இணையதளங்கள் செய்தி வெளியிட்டு விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை மிஸ்டி சக்கரவர்த்தி, அது நான் இல்லைப்பா என்று விளக்கம் அளித்துள்ளார்.

செல்ல வேண்டிய தூரம்

செல்ல வேண்டிய தூரம்

அவர் தனது இஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சில மீடியா, நான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. கடவுளின் அருளால் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், அந்த செய்தியை கண்டு நாங்களும் முதலில் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியுள்ளனர்.

செம போத ஆகாதே

செம போத ஆகாதே

நடிகை மிஸ்டி சக்கரவர்த்தி, தமிழில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்த செம போத ஆகாதே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியில், காஞ்சி: அன்பிரேக்கபிள், பேகம் ஜான் உள்பட சில படங்களிலும் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X