மிஸ் இந்தியா டீசர் வெளியீடு.. அட்டகாச லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகும் மிஸ் இந்தியா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.
தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார். தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும் உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சிறந்த நடிகை
தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்.
டீசர் வெளியீடு
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள மிஸ்இந்தியா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருக்கிறது. மிஸ் இந்தியா படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம் ஆகும்.

அறிமுக இயக்குநர்
இதில் கொஞ்சம் உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்துடன் காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கிறார்.

மூக்குத்தி,ஸ்லீவ் லெஸ்
இதில் ஹோம்லி, மார்டன் என அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஸ்லீவ்லெஸ் உடையில் மூக்குத்தி அணிந்து புதிய ட்ரென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்

டிவிட்டரில் ட்ரென்ட்
டீசர் வெளியானதை #missindia என்ற ஹேஷ்டேக்கும், இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 20வது படம் என்பதால் #Keerthy20 என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











