For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    பெயர் தெரியாத காதலனை தேடும் 'மிஸ் மெட்ராஸ்' டைட்டில் வின்னர்... பாவம் இந்த பெண்ணின் நிலைமை!

    |

    சென்னை: அமையா எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் மிஸ் மெட்ராஸ் 2016 பட்டம் வென்ற சுஜா சூர்ய நிலா.

    பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ' அமையா'. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் 2016ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

    Miss Madras 2016 Suja Suriya Nila debut in Amaya

    இந்தப்படத்திற்கு எஸ்.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குனர் நிகில் வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ பி.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    Miss Madras 2016 Suja Suriya Nila debut in Amaya

    முகவரி, பெயர் என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு. அமையா தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்து பார்க்கும் விதமாக படம் துவங்குகிறது.

    Miss Madras 2016 Suja Suriya Nila debut in Amaya

    "தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப்பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும். அழகான லொக்கேஷன்களும் பழங்குடியினரின் கலாச்சராம் எல்லாமுமாக சேர்ந்து இந்த 'அமையா ' மிகப்பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும்" என்கிறார் இயக்குனர் நிகில் வி.கமல்.

    English summary
    Amaya is a tamil romantic drama film written and directed by Nikhil V.Kamal. The film stars Suja Suriya Nila (Miss Madras 2016) in her feature film debut as the the title character, Master Mahindran playing a very pivotal role in the film .

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more