Miss Maggie Teaser: அவ்வை சண்முகி கமல் போல கலக்குறாரே யோகி பாபு.. மாதம்பட்டி ரங்கராஜின் மிஸ் மேகி!
சென்னை: டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லதா ஆர். மணியரசு இயக்கத்தில் யோகி பாபு, மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா நடித்துள்ள மிஸ் மேகி படத்தின் கலக்கலான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் யோகி பாபு சமீப காலமாக கலக்கி வருகிறார்.
யோகி பாபு மீது தேவையற்ற பஞ்சாயத்துகளும் தயாரிப்பாளர்களை காலி செய்கிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் சமீபத்தில் பிரச்சனைகளாக கிளம்பின. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் தொடர்ந்து நடித்து வரும் வேலையை பார்த்து வரும் யோகி பாபு தனது அடுத்த படமான மிஸ் மேகி படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக மாறிய நிலையில், அவர் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் இந்த மிஸ் மேகி என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜோடி: பிரபலங்களின் திருமணம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜின் சமையலை புக் பண்ணிடுங்கப்பா என்கிற அளவுக்கு பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டாரா என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு பதிலாக இந்த மிஸ் மேகி படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

அவ்வை சண்முகியாக மாறிய யோகி பாபு: யோகி பாபு இந்த படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பது போல ஆரம்பத்தில் காட்டி வந்த நிலையில், திடீரென பெண் வேடமிட்டு அவ்வை சண்முகி கமல்ஹாசன் போல கெட்டப் மாற்றி முதன்முதலாக வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் நிலையில், அவரது காமெடி அலப்பறையை காண நிச்சயம் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்றே தெரிகிறது.
ஓடிடி விற்பனைக்கு: ஓடிடியில் புதுமுக நடிகர்களின் படங்கள் விற்பனையாக வேண்டுமென்றாலே யோகி பாபு அந்த படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்திருந்தால் கூட அவருடைய முகத்தைக் காட்டி பல ஓடிடி நிறுவனங்கள் படங்களை வாங்கி வெளியிட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மிஸ் மேகி திரைப்படமும் ஓடிடியில் எளிதாக விற்பனையாகி விடும் என்றே டீசரை பார்க்கும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











