Bigg Boss Tamil 5: என்னது பாக்ஸரா? அடி பலமா விழும் போல தெரியுதே.. யார் இந்த அக்ஷரா ரெட்டி?
சென்னை: 2019ம் ஆண்டுக்கான மிஸ் சூப்பர் குளோப் பட்டம் பெற்ற அக்ஷரா ரெட்டி இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
Recommended Video
தலையில் க்ரீடம் அணிந்த படியே நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டி கமல் முன்பாக கலந்து கொண்டார்.
தற்போது பாக்ஸிங்கும் இவர் பழகி வருவதாக அக்ஷரா ரெட்டி சொன்னதும் ரசிகர்கள் வீட்டில் சண்டை வந்தால் அடி பலமா விழும் போல தெரியுதே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சூப்பர் கூல் கமல்
சூப்பரான ஜாக்கெட் அதில் ஹூடி எல்லாம் போட்டுக் கொண்டு கமல்ஹாசன் செம சூப்பர் கூலாக பிக் பாஸ் கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதை பார்க்கவே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் இந்த சீசனை பார்த்து வருகின்றனர்.

எப்படி இருக்கப் போகுதோ
அக்டோபர் 3ம் தேதியான இன்று தொடங்கி உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த 100 நாட்களுக்கும் மேல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் கொடுக்க காத்திருக்கிறது. சண்டை, சர்ச்சை, கொண்டாட்டம், காதல், மோதல் என பல உணர்வுகளையும் இந்த சீசன் கொடுக்கும் என்பது கன்ஃபார்ம்.

தெரியாத முகங்கள்
கடந்த சீசனை போல ஏகப்பட்ட தெரிந்த முகங்களாக இல்லாமல், இந்த முறை அதிகளவில் தெரியாத புதிய முகங்களை போட்டியாளர்களாக களமிறக்கி உள்ளது பிக் பாஸ் குழு. கடந்த சீசனை ரசிகர்கள் கழுவி ஊற்றிய நிலையில், இப்படியொரு மாற்றத்தை பிக் பாஸ் சோதனை முயற்சியாக மேற்கொண்டு இருக்கிறது.

யார் இந்த அக்ஷரா ரெட்டி?
2019ம் ஆண்டு மிஸ் சூப்பர் குளோப் பட்டம் வென்ற அக்ஷரா ரெட்டி பிக் பாஸ் சீசன் 5ல் 14வது போட்டியாளராக கலந்து கொண்டார். 13வது போட்டியாளரான மாடல் அழகி சுருதி உடன் இவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே நுழைந்தனர்.

மலேசிய படம்
சென்னையில் பிறந்து வளர்ந்த அக்ஷரா ரெட்டி 2019ம் ஆண்டு இந்தியளவிலான மிஸ் சூப்பர் குளோப் மற்றும் உலகளவிலான மிஸ் சூப்பர் குளோப் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். காசு மேல காசு எனும் மலேசிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், ஹேப்பி நியூ இயர் எனும் தமிழ் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

வில்லா டு வில்லேஜ்
விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அக்ஷரா ரெட்டி அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்றார். அதன் பிறகு தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் அனைத்துமே உறுதியாகி விடும்.

பாக்ஸிங் பயிற்சி
சினிமா, சின்னத்திரை, மாடலிங் என கலக்கிய அக்ஷரா ரெட்டி தற்போது பாக்ஸிங் பயிற்சியை தீவிரமாக கற்றுக் கொண்டு வருவதாகவும் தனது ஏவியில் கூறினார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் சண்டை போட்டால் அக்ஷரா வாயிலேயே குத்து விடுவாரா? என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











